ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த இவர் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக மாறினார்.34 வயதான இவர் மும்பையில் நேற்று தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

Sushanth Singh Rajput Helps Fan During Kerala Floods

இதனை தொடர்ந்து பல பிரபலங்களும்,ரசிகர்களும் சுஷாந்துடனான நினைவுகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.2018-ல் கேரளாவில் எப்போதும் இல்லாத அளவு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது.அப்போது சுஷாந்தின் ரசிகர் ஒருவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மனமுள்ளது ஆனால் பணமில்லை என்று தெரிவித்தார்.

Sushanth Singh Rajput Helps Fan During Kerala Floods

இதற்கு பதிலளித்த சுஷாந்த் உங்கள் பெயரில் நான் ரூ.1 கோடியை கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி அளிக்கிறேன் அங்கிருப்பவர்களுக்கு இந்த உதவி சென்றடைவதை உறுதிசெய்யுங்கள் என்று தெரிவித்தார்.தான் பணம் அனுப்பியதற்கான கணக்கின் விவரங்களையும் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.சுஷாந்தின் இந்த செயலை நினைவு கூறி கேரள முதல்வரும்,கேரளத்தில் வசிக்கும் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.இதனை தவிர நாகலாந்து வெள்ளத்தின் போதும் சுஷாந்த் ரூ.1.25 கோடி உதவித்தொகையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.