கொரோனா பேரிடர் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. சில நாட்கள் முன்பு சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னை மஹாராணி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. 

Maharani Theatre In Chennai Permanently Closed

வடசென்னை மக்களுக்கு இந்த திரையரங்கம் பற்றிய அருமை கூடுதலாக தெரிந்திருக்கும்.  1949-ம் ஆண்டு கட்டப்பட்ட திரையரங்கம் தான் மஹாராணி தியேட்டர். சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம், படங்களின் கலெக்ஷன் கிங் என அழைக்கப்படும். 

Maharani Theatre In Chennai Permanently Closed

கால மாற்றத்துக்கு ஏற்றபடி உட்கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வந்தபோதும் அதைக் காரணம் காட்டி டிக்கெட் விலையை உயர்த்தியதில்லை. இன்றுவரை அரசு நிர்ணயித்த தொகையையே டிக்கெட் கட்டணமாக வசூலித்து வந்தது. இச்செய்தி சென்னை வாசிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.