கண்களால் கைது செய் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதன் பிறகு வெளியான பருத்திவீரன் படம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர். பிரியாமணி என்று சொன்னாலே தற்போதும் நம் மனதிற்கு ஞாபகம் வருவது பருத்திவீரன் முத்தழகு கதாபாத்திரம் தான். அமீர் இயக்கிய அந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். 

பருத்திவீரன் படத்திற்கு பிறகு அதே போன்ற கதாபாத்திரங்கள் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வந்தது. ஆனால் அவற்றை நிராகரித்து வெரைட்டியாக கமர்ஷியலில் நடிக்க வேண்டும் என்று பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அவர் நடித்த படங்களுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அதனால் பிற மொழி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

இந்நிலையில், நடிகை லைலா பிரியாமணியுடன் இருக்கும் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். லைலா பிஸியான ஹீரோயினாக இருந்த காலத்தில், அவரை நேர்காணல் செய்ய பிரியாமணி சென்ற போது எடுக்கப்பட்ட படமாகும். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லைக்குகளை குவிக்கும் இந்த புகைப்படத்தின் கீழ் பிரியாமணியின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

நடிகை பிரியாமணி விரட்ட பர்வம் எனும் படத்தில் நடித்துள்ளார். 90 களில் நடப்பது போல எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ராணா போலீசாக நடிக்கிறார். சாய் பல்லவியும் நக்சலைட்டாக நடிக்கிறார். அதற்காக அவர் உண்மையாக Ex நக்சலைட்டுகள் உடன் இருந்து பயிற்சி பெற்றுக்கொண்டார் என்றும் கூறப்பட்டது. 

இதனையடுத்து பாலிவுட் சினிமாவிலும் முதல் முறையாக கால் பதிக்கவுள்ளார் பிரியாமணி. அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் என்ற படத்தில் அவரது ஜோடியாக நடித்துளளார் அவர். முன்னாள் கால்பந்து வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம். அது மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.