2012-ல் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.ஹீரோயின் ஆவதற்கு முன் 2010-ல் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.தமிழின் முதல் சூப்பர்ஹீரோ படமாக முகமூடி உருவானது.பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவான முகமூடி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் பூஜாவிற்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்தன.

இதனையடுத்து தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் நடிக்கத்தொடங்கினார் பூஜா.ஹ்ரித்திக் ரோஷனின் மொஹஞ்சதாரோ படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் , பல ரசிகர்களை பெற்றார்.தெலுங்கில் இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்க ராசியான நடிகையாக மாறினார் பூஜா ஹெக்டே.ஜூனியர் NTR,அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு என்று வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் பூஜா.

கடைசியாக இவர் ஹீரோயினாக நடித்து வெளியான திரைப்படம் Alavaikunthapuramuloo.அல்லு அர்ஜுன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான இந்த படம்,ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த இந்த படத்தை தொடர்ந்து பூஜாவிற்கு மீண்டும் சில பட வாய்ப்புகள் வந்துள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.இதற்கு பூஜா ஹெக்டேவும் விதிவிலக்கல்ல.தன்னால் முடிந்தளவு ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்து வந்தார் பூஜா.உடற்பயிற்சி மற்றும் நடனத்தில் பெரிதும் ஆர்வம் கொண்ட பூஜா அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும்,புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.தற்போது பூஜா ஹெக்டே யோகா செய்யும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றன.சமூகவலைத்தளங்களை கலக்கும் இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

That gratifying exhaustion after a good yoga class... sweaty but happy ☺️❤️ @jogmihir thank you🙏🏻

A post shared by Pooja Hegde (@hegdepooja) on