சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ருதி ராஜ்.இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் கிடைத்தனர்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரின் மூலம் சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவதரித்தார் ஸ்ருதி.

ஆபீஸ் சீரியலின் வெற்றியை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் நடித்தார்.இந்த சீரியலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து மீண்டும் சன் டிவிக்கு வந்தார் ஸ்ருதி ராஜ்.அபூர்வ ராகங்கள் என்ற தொடரில் நடித்து வந்தார் ஸ்ருதி.இந்த தொடர் 2018-ல் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து 2018 முதல் தற்போது வரை ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்து வந்தார்..இந்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வந்த தொடர்களில் இந்த தொடர் மிகவும் முக்கியமானது.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.ரேவதி,தலைவாசல் விஜய்,சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் ஆரம்பித்ததென்றும்,கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது என்றும் தகவல்கள் வந்தன.ஆனால் இந்த சீரியல் பாதியில் கைவிடப்பட்டுள்ளது என்று இந்த சீரியலின் ஹீரோயின் தற்போது தெரிவித்துள்ளார்.இது குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ஸ்ருதிராஜ்,தனக்கு பல ரசிகர்களும் அழகு தொடர் குறித்து விசாரித்து வருவதாகவும்,அவர்களுக்கு விளக்கமளிக்கவே இந்த வீடியோ என்று தெரிவித்த ஸ்ருதிராஜ்.ஷூட்டிங்கிற்கு அனைவரும் தயாராகி வந்தோம் ஆனால் திடீரென்று இந்த தொடர் கைவிடப்படுவதாக அறிவித்தனர்.இந்த செய்தி எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.மேலும் தனக்கும் தனது சுதா கதாபாத்திரத்துக்கும் ரசிகர்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த தொடரில் நடித்த அனைவரையும் மிஸ் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.விரைவில் ஒரு புதிய தொடரில் உங்களை சந்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.