நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியூட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். தந்தை சத்யராஜ் போலவே சமூக அக்கறை அதிகம் கொண்ட திவ்யா, மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர்களில் ஒருவர். தற்போது கொரோனா இந்தியாவில் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் அதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கான அறிவுரைகள் சிலவற்றை வழங்கி இருக்கிறார். கொரோனா நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் சில வழிமுறைகளை கூறுகிறார். 

dhivyasathyaraj

கொரோனா வைரஸ் முதியவர்களையும், சிறு வயது குழந்தைகளையுமே அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாகவே இருக்கும். அதேசமயம், வழக்கத்தை விட மிக குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடைய நடுத்தர வயதினரையும் கொரோனா வைரஸ் தாக்கும்.

Sathyaraj

உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனாவிற்கு முறையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது அவசியமாகிறது. கை கழுவுதல், மக்கள் கூடும் இடங்களை தவிர்த்தல், சுவாச கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளையும், மருந்துகளையும் உட்கொள்ளவேண்டும்.

Dhivyasathyaraj

நெல்லிக்காய், எலுமிச்சை, புரோக்கோலி, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘வைட்டமின்-சி’ நிறைந்திருக்கிறது. இவற்றை அடிக்கடி உட்கொள்வதன் மூலம், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சிலருக்கு இவை போதுமானதாக இருக்கும். ஆனால் ஒருசிலருக்கு ‘வைரஸ்’ தொற்றை எதிர்க்க கூடுதலான வைட்டமின்கள் தேவைப்படும்.

அதனால் ‘வைட்டமின்-சி’ சத்து நிறைந்த மருந்து-மாத்திரைகள், சாவன்பிராஷ் போன்ற லேகியங்களை டாக்டர்களிடம் ஆலோசித்து எடுத்துக்கொள்ளலாம். தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது பாராட்டுதலுக்கு உரியது. அவற்றோடு, கொரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரியான ‘வைட்டமின்-சி’ மருந்து-மாத்திரைகளை, மக்களுக்கு இலவசமாக கொடுக்கலாம்.

நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பலமானால், கொரோனா மட்டுமின்றி வேறு எத்தகைய வைரஸ் தாக்குதலும் நம்மை நெருங்காது. அதனால் ‘வைட்டமின்-சி’ சத்துப்பொருட்களை, அன்றாட உணவோடு சேர்த்து கொண்டால், நோய்கள் என்றுமே நம்மை நெருங்காது” என்ற கருத்தோடு விடை கொடுத்தார்.