பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதி வாரத்தை எட்டிவிட்டது. ஃபினாலேவிற்கு தயாராகி வருகின்றனர் போட்டியாளர்கள். இதற்கு முன் எலிமினேட் ஆனா போட்டியாளர்கள் மொத்த பேரையும் மீண்டும் வீட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றனர். ஷிவானி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி தவிர மற்ற 16 போட்டியாளர்கள் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கின்றனர். நேற்று போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இதற்கு முன்பு செய்த காமெடியான விஷயத்தை வீடியோ தொகுப்பாக போட்டு காட்டப்பட்டது.

அதன் அனைவரையும் எமோஷ்னல் ஆக்கும் விதமாக ஒரு வீடியோவாக போட்டு காட்டினார். யார் என்று கூட தெரியாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அனைவரும் தற்போது தாத்தா, அப்பா, சகோதரன், மகன், தம்பி, நண்பன், அக்கா என பல விதமான சொந்தாமாக மாறி இருப்பது பற்றி தான் அந்த வீடியோ. இந்த 100 நாட்களில் போட்டியாளர்கள் இடையே நடந்த மிகவும் எமோஷ்னல் ஆன விஷயங்களை தான் மீண்டும் போட்டு காட்டி இருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்ததும் அனைவரும் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சில தினங்களில் ஷோ முடியும் முன்பு அனைவரையும் பிக் பாஸ் இப்படி கண்ணீர் விட வைத்துவிட்டாரே. இந்த சீசனில் போட்டியாளராக வந்த அனிதா சம்பத் முதலில் அதிகம் வரவேற்பை பெற்றார். ஆனால் அவர் ஆரியுடன் சண்டை போட்டு கத்திய நிலையில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சில தினங்களில் அவரது அப்பா திடீர் மரணம் அடைந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

வீட்டுக்கு மீண்டும் வந்த அனிதா மிகவும் எமோஷ்னலாக இருந்தார். அவருக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறினர். ஆரியிடம் அவர் பேசும்போது தான் வெளியில் சந்தித்த விஷயங்கள் பற்றி வருத்தமாக பேசினார். ஆரியிடம் தான் கத்தியது பற்றி நெகட்டிவ் விமர்சனம் அதிகம் வந்தது. அதிகம் திட்டி மெசேஜ்கள் வந்துகொண்டிருக்கின்றன. நான் உங்களிடம் கத்தியது பற்றி அதிகம் வந்த னெக்டிவிட்டியை கணவர் பிரபா தான் சமாளித்துக் கொண்டிருக்கிறார். இந்த நெகட்டிவிட்டி மற்றும் அப்பா மரணம் ஆகியவற்றை என்னால் handle பண்ண முடியவில்லை என என அனிதா கண்ணீருடன் கூறி இருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டின் பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்றது. பொங்கல் வைத்து பாரம்பரிய உடை அணிந்து சூப்பராக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள். உறியடி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற விளையாட்டு போட்டிகளையும் விளையாடி பொங்கலை கொண்டாடி வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.