தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக 2019 பொங்கலுக்கு பட்டாஸ் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் ஜகமே தந்திரம்,கர்ணன்,D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் ஒரு படம்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.ஜகமே தந்திரம்,கர்ணன் படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியது.இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் லுக்கை இன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.தற்போது இந்த லுக் வெளியிடப்பட்டுள்ளது அதோடு படத்தின் டைட்டில் நானே வருவேன் என்பதும் தெரியவந்துள்ளது.இதனை தனுஷ் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.