தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.இதனை தொடர்ந்து புதுயுகம் சேனலில் வேலைபார்த்த இவர் தற்போது ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் தொடரை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.இதனை தொடர்ந்து தற்போது தீபக்குடன் இணைந்து இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் ரத்தாகி உள்ளன.விரைவில் இந்த தொடரின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா காரணமாக இந்த லாக்டவுன் நேரத்தில் பல பிரபலங்களும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது,ரசிகர்களுடன் லைவ் ஆக வந்து அவர்களுடன் கலந்துரையாடுவது என்று தங்கள் நேரத்தை வந்தனர்.

அஞ்சனா எப்போதும் தனது இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருப்பவர்.இவரது புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று,லைக்குகளை அள்ளும்.டிக்டாக்கிலும் அஞ்சனா அவ்வப்போது வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.டிக்டாக் சில மாதங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் அச்சுஅசலாக டிக்டாக் போன்ற ரீல்ஸ் என்ற சேவையை தொடங்கினர் இதிலும் பலரும் தங்கள் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.தற்போது அஞ்சனா இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.தனது முதல் ரீல்ஸ் வீடீயோவை அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

First Reel ❤️ Buttabomma with cutest kutti bommai ❤️❤️❤️ #niece #love #bommai

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on