தமிழ் திரையுலகில் பிஸியான நடிகர்களில் ஒருவர் சதீஷ். தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 2006-ம் ஆண்டு ஜெர்ரி படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர், பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர்த்து சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம், ஜெயம் ரவியுடன் பூமி, ஆர்யா நடிக்கும் டெடி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்களில் சதீஷும் ஒருவர். படப்பிடிப்பு எங்கேயும் செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். சமீபத்தில் கொரில்லா படப்பிடிப்பு தளத்தில், ஸ்டண்ட் காட்சியின் போது டூப் ஆர்ட்டிஸ்ட் நடித்த காட்சியை வீடியோ பதிவு செய்து பகிர்ந்தார் சதீஷ். இந்த வீடியோ இணையவாசிகள் விரும்பும் வகையில் அமைந்தது. 

இந்த லாக்டவுன் நடிகர் சதீஷுக்கு ஸ்பெஷல் என்றே கூறலாம். நேரம் கிடைக்கையில் லைவ்வில் தோன்றி தனது திரைப்பயணம் பற்றியும், முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார். வீணை வாசிப்பது, தந்தைக்கு ஷேவிங் செய்வது என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார். லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புகள் துவங்கினால், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவிருக்கும் இந்தியன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார் சதீஷ். 

இந்நிலையில் ஃபேஸ்ஆப் மூலம் நடிகர் சதீஷை டாம் க்ரூஸ் போல் மாற்றி வீடியோவை பகிர்ந்துள்ளனர் அவரது ரசிகர்கள். பொதுவாக ஏதாவது ஒரு ஆப் வந்தால், அதில் பிரபலங்களின் வெர்ஷன் தனியே வரும். அதே போல் தான் தற்போது சதீஷுக்கு இந்த மிஷன் இம்பாசிபிள் வீடியோ. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் இந்த எதார்த்தமான குணம் தான் சதீஷின் டைமிங் காமெடிக்கு உறுதுணையாக உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் சதீஷ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை மீதம் உள்ள படப்பிடிப்பும் தள்ளிப்போனது.