தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் இயக்கம் துக்ளக் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரனின் உதவியாளரான டெல்லிபிரசாத் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு துக்ளக் என்று பெயரிட்டுள்ளனர்.96 படத்தினை தமிழகத்தில் ரிலீஸ் செய்த 7 க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் நாளை பூஜையுடன் தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.மேலும் இந்த படத்தில் அதிதி ராவ் ஹையாத்ரி ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.