கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தொடர்கிறது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். சமையல், நடனம், பாடல், விளையாட்டு, பழைய புகைப்படங்களை பகிர்வது என அசத்தி வருகின்றனர். 

Aamir Khan Clarifies About Money In Wheat Bags

இதனிடையே ஏழை மக்களுக்கு நடிகர் அமீர்கான் ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட் கொடுத்து உதவியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் ரூ.15000 இருந்ததாகவும் தகவல்கள் பரவின. நூதனமுறையில் மக்களுக்கு உதவி செய்ததாக கூறி பலரும் அமீர் கானுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

Aamir Khan Clarifies About Money In Wheat Bags

தற்போது இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் நடிகர் அமீர் கான். கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பணம் வைத்து கொடுத்த நபர் நான் அல்ல. அது முழுக்க போலியான கதை. அந்த ராபின் ஹூட் தன்னை வெளிப்படுத்தக் கூடாது என விருப்பப்பட்டிருப்பார். பாதுகாப்பாக இருங்கள் என்று எடுத்துரைத்துள்ளார். லால் சிங் சத்தா திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அமீர் கான்.