தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நேரடியாக OTT-யில் வெளியாகியுள்ள படம் மாறன்.சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தயாரான இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகியுள்ளது.இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து பார்க்கலாம்

உண்மையை மட்டுமே மக்களுக்கு தெரியவைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழும் நேர்மையான பத்திரிகையாளராக வரும் ராம்கி , ஒரு செய்தியை வெளியிட்டு அதன் விளைவாக உயிரை விடுகிறார்.அவரது மனைவி பிரசவத்தில் இறக்க பிறந்த குழந்தையோடு நிற்கிறான் அவர்களின் மூத்தமகன் தனுஷ்.தங்கையை தானே வளர்த்து , தந்தையை போலவே நேர்மையான பத்திரிக்கையாளராக வாழ்ந்து வருகிறார் தனுஷ்.தனுஷ் வெளியிட்ட ஒரு செய்தியால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறிப்போகிறது அதனை எப்படி சமாளித்து தனுஷ் மீண்டு வந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை

படத்தின் நாயகன் மாறனாக தனுஷ், பல இடங்களில் படத்தினை தாங்கி பிடித்து கொண்டுபோகிறார் திரைக்கதையில் சுவாரசியம் குறையவே அவராலும் படத்தினை காப்பாற்ற முடியாமல் போகிறது.ஆக்ஷன்,செண்டிமெண்ட் என எப்போதும் போல தனுஷ் தனக்கான வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.மாளவிகா மோஹனன் எப்போது வருகிறார் எப்போது எங்கே செல்கிறார் என்று தெரியாமல் சென்று விடுகிறார்.தனுஷிற்கு அடுத்தபடியாக கொஞ்சம் நடித்திருந்தது அவரது தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் தான்.அமீர்,சமுத்திரக்கனி,போஸ் வெங்கட்,ஆடுகளம் நரேன் என பல நல்ல நடிகர்கள் இருந்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்தாது பெரிய பின்னடைவு.

தமிழ் சினிமாவிற்கு ஓரளவு பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் , இயக்குனர் கார்த்திக் நரேன் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் படத்தின் விறுவிறுப்பை மெருகேற்றி இருக்கலாம், திரைக்கதையில் இருக்கும் தொய்வு படத்திற்கு மிகப்பெரும் மைனஸ் ஆக அமைகிறது.சில கதாபாத்திரங்கள் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.எந்த கதாபாத்திரமும் நினைவில் வைத்துக்கொள்வது போல இல்லாதது மற்றுமொரு பின்னடைவு.ஈஸியாக கணிக்க கூடிய ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்தவைக்கமால் போகின்றன.

படத்தில் வில்லன் யார் என கண்டுபிடிக்கும் அந்த ஒரு ட்விஸ்ட் சற்று ஒர்க்கவுட் ஆனது ஆனால் அதன் பிறகு மீண்டும் படம் பிக்கப் ஆகாமல் சென்றது ஏமாற்றம் தான்.படம் 2 மணி நேரம் 10 நிமிடம் தான் என்றாலும் மிகவும் ஸ்லொவான திரைக்கதையால் படத்தின் நீளத்தை நம்மால் உணர முடிகிறது.கேமரா,எடிட்டிங் துறைகள் தங்களுக்கான வேலையை சரியாக செய்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் பாடல்கள் BGM என இரண்டுமே சுமார் ரகமாக அமைந்தது மற்றுமொரு மைனஸ்.கதை,திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு ரசிகர்கள் ரசிக்கும் படி ஒரு படத்தினை கொடுத்திருக்கலாம்

பொறுமை இருந்தால் மாறன் படத்தினை உங்கள் இல்லத்திரைகளில் பார்க்கலாம்