கைதி திரை விமர்சனம் ! Movie Review (2019)

25-10-2019
Lokesh
Kaithi Movie Review

Kaithi Movie Cast & Crew

Cast : Karthi,
Production : Dream Warrior Pictures
Director : Lokesh
Music Director : Sam C S

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கைதி.2017-ல் வெளியான மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.

Karthi Lokesh kanagaraj Kaithi Movie Tamil Review

ஒரு போதை கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 900 கிலோ போதை பொருளை காப்பாற்றும் வேலையில் இருப்பவர் நரேன்.அவரிடம் இருந்து அந்த சரக்கை மீட்க போராடும் போதை கும்பல்.தனது 10 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்து வெளியேவந்து தனது மகளை சந்திக்க காத்திருக்கும் கார்த்தி.நரேன் கார்த்தியிடம் உதவி கேட்க போதைபொருள் கடத்தும் கும்பல் கைதுசெய்யப்பட்டனரா , கார்த்தி இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு தனது மகளை சந்தித்தாரா இல்லையா என்பது மீதிக்கதை.

Karthi Lokesh kanagaraj Kaithi Movie Tamil Review

கதையின் நாயகன் டில்லியாக கார்த்தி கதையை தனியாளாக முதுகில் சுமக்கிறார்.ஹீரோயின் இல்லாமல் ,பாடல்கள் ஏதும் இல்லாமல், ஒரு ஆயுள் தண்டனை முடிந்த கைதியாகவும், 10 வருடங்கள் கழித்து தன் மகளை பார்க்கத் துடிக்கும் தந்தையாகவும் கார்த்தி தனது முத்திரையை பதித்திருந்தார்.நரேன்,கலக்கப்போவது யாரு தீனா,ஹரிஷ் உத்தமன்,ரமணா என்று படத்தில் இருக்கும் பிற நட்சத்திரங்கள் தங்களது வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.குறிப்பாக நரேன் கார்த்தியுடன் போட்டிபோட்டு நடித்துள்ளார்.

Karthi Lokesh kanagaraj Kaithi Movie Tamil Review

லோகேஷ் கனகராஜ் தனது வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை நேர்த்தியாக கவர்கிறார் என்றாலும் சில காட்சிகள் எதார்த்தத்தை மீறியதாக இருந்தன அவற்றை குறைத்திருக்கலாம்.படத்தின் மற்றொரு மிகப்பெரும் பலமாக இருப்பது இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை.ஃபிலோமின் ராஜின் எடிட்டிங் படத்தின் ஓட்டத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.சில இடங்களில் சண்டைக்காட்சிகள் எதார்த்தத்தை மீறி இருக்கிறது அவற்றை சரிசெய்திருந்தால் இன்னும் நல்ல படமாக அமைந்திருக்கும்.படத்தின் தொடக்கத்தில் இருந்தே கதைக்குள் வரும் கைதி அந்த தடத்தை விட்டு மாறாமல் சீராக செல்கிறது

Karthi Lokesh kanagaraj Kaithi Movie Tamil Review

Verdict: தரமான ஆக்ஷன் திரில்லர் படத்தை தீபாவளி விருந்தாக அளித்துள்ளது கார்த்தி-லோகேஷ் கனகராஜ் கூட்டணி

Galatta Rating: ( 3 /5.0 )Rate Kaithi Movie - ( 1 )
Public/Audience Rating