ஆக்ஷன் திரை விமர்சனம் ! Movie Review (2019)

15-11-2019
Sundar C
Action Movie Review

Action Movie Cast & Crew

Production : Trident Arts
Director : Sundar C
Music Director : Hip Hop Tamizha

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆக்ஷன்.ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி மீண்டும் விஷாலுடன் இணையும் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் நிறைவு செய்ததா என்பதை பார்க்கலாம்

Vishal Sundar C Action Tamil Movie Review

முதலமைச்சரின் மகனும்,ராணுவ வீரருமான விஷால் தனது அண்ணன் ராம்கி கட்சி பொறுப்பை ஏற்கும் விழாவில் கலந்துகொள்கிறார்.அந்த விழாவில் பங்குபெற்றிருக்கும் தேசிய தலைவர் ஒருவரை ஒரு கும்பல் குண்டு வைத்துக்கொள்கிறது.இதற்கு ராம்கி தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறார்.எதிர்பாராத விதமாக ராம்கியும் கொல்லப்பட பழி ராம்கி மீதுவிழுகிறது.தன் அண்ணனை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் நோக்கோடு விஷால் கிளம்புகிறார்.வில்லன் யார் என்பதை கண்டுபிடித்தாரா? அவர்களை பழிவாங்கினாரா இல்லையா என்பது மீதிக்கதை.

Vishal Sundar C Action Tamil Movie Review

கதையின் நாயகன் சுபாஸாக விஷால் மிடுக்கான மிலிட்டரி ஃஆபிஸராக பக்காவாக கதாபாத்திரத்துக்கு பொருந்திப்போகிறார்.ஆக்ஷன் காட்சிகளில் விஷால் மிரட்டியுள்ளார் என்றாலும் இந்த படத்தில் அவருக்கு கிளைமாக்ஸ் காட்சியில் அளிக்கப்பட்டிருந்த மாறுவேடம் அவருக்கு சற்றும் பொருந்தவில்லை.அவருக்கு நிகராக தமன்னாவும் தன்பங்கிற்கு சண்டை காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.மாற்றோரு ஹீரோயினாக அறிமுகமாகும் ஐஸ்வர்யா லக்ஷ்மி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார்.

Vishal Sundar C Action Tamil Movie Review

இவர்களை தவிர படத்தில் கபீர் சிங்,சாயா சிங்,ராம்கி,யோகி பாபு,ஷாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் அவ்வப்போது திரையில் வந்துபோகின்றனர்.ஆனால் யாருடைய கதாபாத்திரமும் மனதில் நிற்கும் படி அமையவில்லை.

Vishal Sundar C Action Tamil Movie Review

சுந்தர் சி தனது வழக்கமான காமெடி ஆக்ஷன் படங்களை விட்டு வெளியே வந்து முழுநீள ஆக்ஷன் படமொன்றை ரசிகர்களுக்கு கொடுக்க முயற்சித்திருக்கிறார்.நல்ல கதைக்களம் அமைந்தாலும்,திரைக்கதையும் கதையோட்டமும் படத்திற்கு பின்னடைவாக அமைகின்றன.

Vishal Sundar C Action Tamil Movie Review

காட்சியமைப்புகளை மாற்றியிருந்தால் திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கலாம்.படத்தின் ஒளிப்பதிவாளர் Dudley கதைக்கு தேவையான வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.எடிட்டர் ஸ்ரீகாந்த் காட்சியமைப்புகளில் கவனம் செலுத்தி சில காட்சிகளை குறைத்திருக்கலாம்.

Vishal Sundar C Action Tamil Movie Review

ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடல்கள் சுமார்ரகம் தான் என்றாலும் பின்னணி இசையின் மூலம் படத்திற்கு வலுசேர்க்கிறார்.லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு ஆக்ஷன் படத்தை கமெர்ஷியல் கலந்து கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.

Verdict: ஹாலிவுட் தரத்தில் ஒரு ஆக்ஷன் படத்தை அளிக்க முயற்சித்திருக்கும் சுந்தர் சி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Galatta Rating: ( 2 /5.0 )Rate Action Movie - ( 0 )
Public/Audience Rating