கோவை வடக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தங்கவேல் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் உடனிருந்தார்.


பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த  கமல்ஹாசனிடம் தேர்தல் பரப்புரைக்குச் செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்துவது ஏன் என்று கேள்விகள் கேட்கப்பட்டது. 


இதற்கு விளக்கமளித்த கமல்ஹாசன்,’’ என்னுடைய கட்சியில் 234 பேரில் மக்களுக்குத் தெரிந்த முகம் நான் என்பதால் அனைத்து வேட்பாளர்களுடனும் செல்கிறேன்.  நான் பேருந்தில் சென்றுகொண்டிருந்தவன். ஹெலிஹாப்டர் எனக்குத் தேவையில்லை. என்னை ஹெலிகாப்டரில் போக வைத்ததே மக்கள் தான்.


ஹெலிகாப்டரில் நான் அரசு பணத்தில் செல்லவில்லை. என் சொந்த பணத்தில் தான் செல்கிறேன். அதற்காகவே பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறேன். குறுகிய காலத்தில் நான் சென்றடைய வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறேன்.” என்றார்.