”அதிமுக தள்ளுபடி செய்த கூட்டுறவு சங்க கடனை மீண்டும் திமுக தள்ளுபடி செய்வதாக அறிவிக்கிறது. நாங்கள் செய்த திட்டங்களை ஊடகத்திலும், பத்திரிகையிலும் விளம்பரம் செய்வதில் என்ன தவறு. ஸ்டாலினின் மந்திரம், தந்திரம் எல்லாம் இந்த தேர்தலில் பலிக்காது” என்று திருவிடைமருதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வீரமணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது கூறினார்.


மேலும் அவர், ‘’ இந்த தேர்தலில் வெற்றி பெறுவது போல ஸ்டாலின் கனவு மட்டுமே காண முடியும். இந்த தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும். மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது தான், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால் விவசாயிகளின் கஷ்டம் அறிந்து அந்த திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது அதிமுக. 


விவசாயிகளுக்கு அதிமுக அரசு செய்த நன்மைகளை சரித்திரம் நிச்சயம் போற்றும், அதிமுக ஆட்சியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்கள் மூலம் பல்வேறு துறைகளில் விருது வாங்கி குவித்துள்ளது அதிமுக அரசு” எனக் கூறினார்.