சென்னையில் அதிவேகமாக கார் ஓட்டி, இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Car accident today two people killed on bike

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு, தனது நண்பர் ஆனந்தனுடன் இரு சக்கர வாகனத்தில் மாதவரம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, அதிவேகமாக பின்னால் வந்த கார் ஒன்று, திடீரென்று இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளது.

Car accident today two people killed on bike

இந்த accidentல் டில்லி பாபு, ஆனந்தன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108-க்கு தகவல் தெரித்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.