டார்க் சாக்லேட்டில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. மற்ற சாக்லேட்களில் இந்த ஆன்டிஆக்ஸிடண்ட்  இருக்காது. வெறும் சுவையூட்டிகள் மட்டும் தான் இருக்கும். அதனால் தான் காலை உணவில் சில துண்டுகள் டார்க் சாக்லேட் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரித்துரைக்கிறார்கள்.

ஒரு தரமான டார்க் சாலேட்டில் பிரதானமாக காஃபின் சேர்க்கப்பட்டு இருக்கும். இதை கோக்கோ பட்டராகவும், கோக்கோ சாலிட்டாகவும்( cocoa solid) பயன்படுத்திருப்பார்கள்.  மிக்ல் சாக்லேட்டுடன் ஒப்பிடும் போது டார்க் சாக்லேட்டில் கோக்கோ அதிக அளவில் சேர்க்கப்படும். இந்த கோக்கோவினால் உடலுக்கு  பல நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. காரணம் கோக்கோவில் ஆன்டிஆக்ஸிடண்ட் மூல பொருகள் அதிகமாக இருக்கிறது.


மேலும் கெட்ட கொழுப்பை கரைப்பது, இரத்த அழுத்ததை குறைப்பது, இதய துடிப்பை சீராக வைத்திருப்பது , செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.  மன அழுத்ததில் இருக்கும் போது சில துண்டுகள் இதை சாப்பிடுவதால் மன சற்று லேசாகிறது எனவும் கூறப்படுகிறது.


டீ, காபியில் மற்றும் டார்க் சாலேட்டில் காஃபின் இருக்கும். அதனால் டீ, காபி அதிகமாக குடிப்பவரா இருந்தால், எப்போதாவது சில துண்டுகள் இந்த சாலேட்டை சாப்பிட்டால் போதுமானது. காரணம் அதிகமாக  காஃபின் எடுத்துக்கொண்டால இதயம் சீராக வேலை செய்யாது. தூக்கமின்மை பிரச்சனைகள் வரக்கூடும். 


ஆனால் எல்லா டார்க் சாக்லேட்டும் நன்மைகள் தருவதில்லை. டார்க் சாக்லேட் வாங்கும் போது, 70% மேல் கோக்கோ இருப்பதாக பார்த்து வாங்கினால் தான் நல்லது. மற்றவை எல்லாம்  சுவையூட்டிகளின் அளவு கூடுதலாக இருக்கும். உடலுக்கு எந்த நன்மையும் கொடுக்காது.