பெண்கள் விடுதிக்குள் வைத்தே 23 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் தான் இந்த கொடூர வன்புணர்வு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டு வரும் ஒரு குறிப்பிட்ட பெண்கள் விடுதி ஒன்றில், சில பெண்கள் தங்கியிருந்தனர்.

அங்கு, கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், அந்த குறிப்பிட்ட விடுதியில் குறிப்பிட்ட சில பெண்கள் மட்டுமே தங்கியிருந்தனர்.

சம்வத்தன்று, அந்த விடுதிகள் குறிப்பிட்ட 23 வயதான இளம் பெண் மட்டுமே தனியாக இருந்து உள்ளார்.

அந்த விடுதியில் தனியாக அந்த பெண் இருப்பதை அறிந்துகொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த விடுதிக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு, அங்கிருந்து தப்பிப்பதற்கு முன்பாக தான் மறைத்து வைத்திருந்த, கத்தியால் அந்த பெண்ணைத் தாக்கி மிக கடுமையாகக் காயப்படுத்தி இருக்கிறார். 

இதில், அந்த பெண் அங்கேயே மயங்கிவிடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளார்.

பின்னர், அந்த விடுதியில் தங்கியிருந்து வேலைக்குச் சென்ற பெண்கள் சிலர், மீண்டும் அந்த விடுதிக்குத் திரும்பி உள்ளனர். அப்படி, அந்த பெண்கள் விடுதிக்குத் திரும்பிய பிறகே இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தெரிய வந்தது.

இதனால், பதறிப்போன அந்த விடுதியின் சக பெண்கள், உடனடியாக பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, அந்த பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், இச்சம்பவம் குறித்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையின் போது, “என்னை பாலியல் பலாத்காரம் செய்த நபர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் குற்றவாளியைத் தேடி கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில், இந்த குற்றவாளிக்கும், பலாத்காரம் செய்து கத்தியால் குத்திய இளம் பெண்ணுக்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

பின்னர், அந்த பெண்ணிடம் போலீசார் மீண்டும் விசாரித்த போது, “அந்த நபரை ஏற்கனவே தெரியும்” என்று, உண்மையை ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.