கணவன் முன்னாடியே கொழுந்தனோடு கள்ளக் காதலில் இருந்து மனைவி, கணவனைக் கொன்று, கொழுந்தனின் மனைவி மீது பழி போட்டு நாடகமாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அந்த பெண்ணுக்கு வரன் பார்த்து வந்த அவரது பெற்றோர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளைப் பார்த்து, திருமணம் செய்து வைத்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் தற்போது உள்ளது.

அதே நேரத்தில், அந்த பெண்ணின் கணவர், தனது சகோதரன், அவருடைய மனைவி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

இப்படி, அவர்கள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த நிலையில், கணவனின் சகோதரர் மீது காதல் வந்து உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் கள்ளக் காதல் உறவில் ஆனந்தமாக இருந்து வந்தனர். இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இப்படியாக, அவர்கள் இருவரும் கள்ளக் காதல் உறவில் இருந்து வந்த நிலையில், இந்த விசயம் அந்த பெண்ணின் கணவருக்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை அழைத்துக் கண்டித்து, எச்சரித்து உள்ளார்.

இதன் காரணமாக, தனது கணவன் மீது கோபப்பட்ட அவரது மனைவி, தன் கணவனைக் கொலை செய்யவும் முடிவு செய்தார்.  

கல்யாணமாகி வந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அவரின் கணவரின் தம்பி மீது காதல் வந்தது .அதன் பிறகு கணவருக்குத் தெரியாமல் இருவரும் ஜாலியாக 
இருந்துள்ளார்கள் .ஒருநாள் அந்த கணவருக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது .அதனால் அவர் தன்னுடைய மனைவியைக் கண்டித்தார் .அதனால் கோபப்பட்ட அந்த
பெண் கணவரைக் கொலை செய்ய முடிவு செய்தார்.

இது தொடர்பாக புது திட்டம் போட்ட அவரின் மனைவி, கடந்த 17 ஆம் தேதி அன்று, தனது கணவருக்கு மதுவை அளவுக்கு அதிகமாக ஊற்றிக் கொடுத்து உள்ளார். 

அப்போது, அளவுக்கு அதிகமாக மது குடித்த அவர், அங்கேயே மயங்கி உள்ளார். இதனையடுத்து, மது போதையில் மயங்கிய கணவனின் கழுத்தை நெரித்து உள்ளார். இதனால், அவர் மூச்சு முட்டி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவனைக் கொலை செய்து விட்டு, அக்கம் பக்கத்தினரிடம் “என்னுடைய கணவருக்கு அவரின் அண்ணி மீது கள்ளக் காதல் உறவு இருந்து உள்ளது என்றும், இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில், அந்த பெண் என் கணவரைக் கொன்று விட்டார்” என்று, அவரது மனைவி நாடகம் ஆடி உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், “மனைவியே தனது மைத்துனரோடு ஏற்பட்ட கள்ளக் காதல் உறவுக்குக் கணவன் தடையாக இருந்த காரணத்தால், மனைவியே அவரை கொலை செய்துவிட்டு, மற்ற குடும்ப உறுப்பினர் மீது பழி போடுவதை” கண்டுபிடித்து உள்ளனர்.

இதனையடுத்து, கணவனைக் கொலை செய்த மனைவியைக் கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

பின்னர், நீதிமன்ற உத்தரவுப் படி, அந்த பெண்ணை சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.