போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ராகினி திவேதி, சஞ்சனா ஆகியோர் “ஒரே ஒரு தம் வாங்கி கொடுங்க” என்று, சிறையில் உள்ள பெண் காவலர்களிடம் கெஞ்சியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போதைப் பொருள்கள் பயன்படுத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பெங்களூரைச் சேர்ந்த நடிகை ராகினி திவேதி, சஞ்சனா ஆகியோர் அடுத்தடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 
விசாரணைக்குப் பிறக்கு நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும், மருத்துவ பரிசோதனைக்கு மேற்கொள்வதற்காகக் கடந்த வாரம் பெங்களூர் கே.சி. அரசு மருத்துவமனைக்கு நடிகை சஞ்சனாவை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் முற்றிலும் ஒத்துழைக்க மறுத்து போலீசாருடகடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் என்றும், 

அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவை நடிகை சஞ்சனாவிடம் காட்டிய பிறகே, அவர் அமைதியாக மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்பட்டது. 

அத்துடன், இந்த பரிசோதனையின் போது, நடிகை ராகினி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் கொஞ்சம் தண்ணீரையும் கலந்து விட்டு, அதன் பிறகு மருந்து பரிசோதனைக்கு அவர் கொடுத்து உள்ளார் என்றும், இந்த தகவல்கள் மருத்துவர்கள் மூலம் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நடிகை ராகினி திவேதி, சஞ்சனா ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சியைில் ஒன்றாக அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, இவர்கள் வெளியே இருக்கும் போது, ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவருக்கும் சிகரெட் மற்றும் மது பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், அவர்களால் சிகரெட் இல்லாமல் இருக்க முடியாமல், சிறையில் இருக்கும் இவர்கள் இருவரும் அங்குள்ள பெண் காவலரிடம் சிகரெட் கேட்டு கெஞ்சி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பெண் போலீசார் சிகரெட் தர மறுத்துவிட்டதால், நடிகைள் இருவரும் அவர்களிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படும் தகவல் வெளியாகிப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகை ராகினி திவேதி ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவருக்கு ஜாமீன் கிடைக்க போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

அதே நேரத்தில், போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கன்னட நடிகர் பாலாஜி, தயாரிப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தேவராஜன் மகன் யுவராஜா ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், நடிகை ராகிணியுடன் கைதான நைஜீரியாவை சேர்ந்த லூம் பெப்பர், வைபவ் ஜெயினிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை  மேற்கொண்டனர். அதில், நடிகை ராகிணிக்கு போதைப் பொருள் சப்ளை  செய்ததாக இந்த 2 பேரும் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளதாகவும், லூம் பெப்பர் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரும் போதை மாத்திரைகளை, நடிகை ராகிணிக்கு பலமுறை  கொடுத்து இருப்பதாகவும்” அவர்கள் கூறி உள்ளனர்.

அத்துடன், போதை பொருள் பழக்கம் மட்டுமின்றி, போதை பொருள்  சப்ளையர்களுடனும் சேர்ந்து நடிகை ராகிணி விற்பனையிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்து உள்ளது. இதனால், ராகிணிக்கு ஜாமீன் கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு கண்காணிப்பு பிரிவின் விசாரணை வளையத்திற்குள் நடிகை ராகிணி கொண்டு வரப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.