நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுத் தாக்கப்பட்டது போலவே, டெல்லியில் 12 வயது சிறுமி ஒருவர், பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கை யாரும் அவ்வளவு எளிதாக மாந்தவிட்டுக் கடந்து சென்றுவிட முடியாது.
 
அந்த அளவுக்கு, நிர்பயா வழக்கைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, அதில் உள்ள மிக மோசமான நினைத்துக்கூடப் பார்த்திடாத மிகவும் பயங்கரமான.. நினைக்க நினைக்க ரணத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய கொடிய சம்பவம் அது.

அதே போல் தான், டெல்லியில் தற்போது வெறும் 12 வயது சிறுமிக்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று சொன்னால், சொல்லும் போதே கண்களில் நீர் வடிகிறது.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தான், இப்படிப்பட்ட இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு டெல்லியில் உள்ள பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் கடந்த 4 ஆம் தேதி அன்று, தனது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், 12 வயது சிறுமி ஒருவர், விட்டில் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, பல கிரிமினல் வழக்குகளில் சிறைக்குச் சென்று வந்த ஒரு நபர், நிதானம் இல்லாத போதையில் அங்கு வந்துள்ளார். அப்போது, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதைக் கவனித்த அந்த நபர், கடும் போதையில், அந்த சிறுமியை மிக கடுமையாகத் தாக்கி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மிருகத் தனமாக வெறித் தீர சிறுமியைப் பலாத்காரம் செய்துவிட்டு, அந்த தடயத்தை அழிக்கும் விதமாக, அந்த வீட்டில் இருந்த கத்தரிக்கோலால், அந்த சிறுமியின் பிறப்பு உறுப்பில் கடுமையாகத் தாக்கி, அந்த தடயத்தை அழிக்கும் விதமாகக் குத்தி கிழித்துள்ளார். அதிலும், அவன் வெறி அடங்காத நிலையில், அந்த சிறுமியின் உடல் பகுதியிலும், சில உறுப்புகளிலும் அந்த கத்தரிக்கோலால் வெறித் தீர குத்தி கிழித்துள்ளான். இந்த தாக்குதலில், அந்த சிறுமியின் தலை மற்றும் குடல் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில், ரத்த வெள்ளத்தில் அந்த சிறுமி மயங்கி விடவே, அந்த வெறிபிடித்த காமுகன், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை அடையாளம் கண்டு, அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், சிறுமியை எழுப்பி உள்ளனர். அப்போது, பாவம் அந்த சிறுமி சுய நினைவு கூட இல்லாமல் அங்கு மயங்கிக் கிடந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமித்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிறுமிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுத் தாக்கப்பட்டது போலவே, 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதே போல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள தகவல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கெஜ்ரிவால், உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுமியை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அத்துடன், சிறுமிக்குத் தேவையான அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியைத் தேடி வந்தனர். அதன்படி, அன்றைய தினம் அந்த வழியாகச் சென்ற சுமார் 100 சந்தேகப்படும் நபர்களை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வந்தனர். அதன்படி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கிய நபரை போலீசார் தற்போது கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணைக்குப் பிறகு, அவனைச் சிறையில் அடைத்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் யார்? அவன் எப்படி அங்கே வந்தான்? உள்ளிட்ட எந்த தகவலையும் போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். குற்றவாளி குறித்த தகவல்களை போலீசார் தற்போது ரகசியமாகவே வைத்துள்ளனர். மேலும், இந்த குற்றச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.