நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் பட வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தமிழில் “யுனிவர்சிட்டி” படத்தில் நடித்த
ஷெர்லின் சோப்ரா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை, நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ள நிலையில், “கஜேந்திரா”, “திண்டுக்கல் சாரதி” பட நடிகை  புளோராவும், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, “ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில்” மும்பை போலீசாரால் கடந்த 20 ஆம் தேதி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

“ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை செல்போன் செயலியின் மூலமாக விநியோகம் செய்ததாகவும், இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்று மும்பை போலீசார் தற்போது கண்டுபிடித்து, அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவை, மும்பை குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்குப் பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு போலீஸ் காவல் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதே போல், முன்னதாக இந்த ஆபாசப் படங்கள் வழக்கில் ஆண் மற்றும் பெண் மாடல்கள், 9 தயாரிப்பாளர்களை மும்பை போலீஸ் கைது செய்திருந்திருந்தனர். இந்த வழக்கில், உமேஷ் என்ற நபர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கில், முக்கியமாகக் குற்றவாளியாகக் கருதப்படும்  ராஜ் குந்த்ராவின் மனைவியான, நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் கதறி அழுதார் என்றும், அது தொடர்பான செய்திகள் மற்றும் போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அத்துடன், ராஜ் குந்த்ராவின் ஆபாசப் படங்களில் நடித்த நடிகைகளையும், தொழில் ரீதியாக அவருடன் தொடர்பு வைத்திருந்த இன்னும் பிற நடிகைகளையும் போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர்.

அதன் படி, தமிழில் “கஜேந்திரா”, “திண்டுக்கல் சாரதி”, “குஸ்தி” “குசேலன்” உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்ற புளோராவுக்கும் ராஜ்குந்த்ராவுக்கும் தொடர்பு உள்ளதாகத் தகவல் பரவியது.

இது தொடர்பான புகாருக்கு, “எனக்கும் ராஜ் குந்த்ராவுக்கும் எந்த தொடர்பு இல்லை” என்றும். நடிகை புளோரா மறுத்து உள்ளார்.

அத்துடன், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பேசி உள்ள நடிகை புளோரா, “ராஜ் குந்த்ராவின் ஆப்பிற்காக, நான் எந்த புராஜக்டிலும் பங்கேற்கவில்லை என்றும், தேவையில்லாமல் எனது பெயரை சிலர் இந்த விவகாரத்தில் தொடர்பு  படுத்துவதாகவும்” அதில் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “ஆபாசப் படம் எடுத்ததில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், ராஜ் குந்த்ரா எடுத்த படங்களில் நான் வேலை செய்யவில்லை” என்றும், நடிகை புளோரா மறுத்து உள்ளார்.

அதே போல், தமிழில் “யுனிவர்சிட்டி” படத்தில் நடித்த ஷெர்லின் சோப்ராவுக்கும், இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து விசாரிக்க போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். 

ஆனால், இந்த வழக்கில் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதே போல், நடிகை ஜெலினா ஜெட்லியும் தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார்.