அக்கா - தங்கையை கொடூரமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களைக் கடுமையாகத் தாக்கி பூச்சி கொல்லி மருந்தைக் குடிக்க வைத்த 4 பேர், “பாம்பு கடித்துவிட்டதாக” அவர்களை மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்குப் பெயர் போன வட மாநிலமான ஹரியானா மாநிலத்தில் தான், உச்சக்கட்ட கொடூரமாக இப்படி ஒரு கொடுமையான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதில், ஒரு சகோதரி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
 
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் 14 வயது மற்றும் 16 வயதான இரு சகோதரிகள், தந்தை இல்லாத நிலையில், தங்களது தாயாருடன் 
வசித்து வந்தனர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமியின் தயார், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில், இந்த சிறுமிகளின் வீடு அருகே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கி இருந்த வருகின்றனர். 

அதிலும், அந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்ளில்  22 வயது முதல் 25 வயதிற்குள் இருக்கும் குறிப்பிட்ட 4 இளைஞர்கள் மட்டும், இந்த இரு சகோதரிகளின் மீதும் சபலப்பட்டு உள்ளனர். இதனால், எந்த நேரமும் அந்த சிறுமிகளைக் கண்காணித்துக்கொண்டே இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களான அந்த 4 இளைஞர்களும் சேர்ந்து, அந்த சகோதரிகளை எப்படியும் பாலியல் பலாத்காரம் செய்து விட வேண்டும் என்று, திட்டம் தீட்டி உள்ளனர்.

இப்படியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த இரு சிறுமிகளின் தாயார் வழக்கம் போல், கூலி வேலைக்குச் சென்று உள்ளார்.

இதனையடுத்து, சகோதரிகளான அந்த சிறுமிகள் இருவரும், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தனியாக வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வேறு யாரும் இல்லாத நிலையில், அங்கு வந்த அந்த 4 இளைஞர்களும், அந்த சகோதரிகளைத் தாக்கி, மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், “இந்த சிறுமிகளை இப்படியே விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று எண்ணிய” அவர்கள், அந்த இரு பெண்களையும் மிக கடுமையாகத் தாக்கி கொடூரத்தின் 
உச்சமாக, தோட்டத்திலிருந்த பூச்சி கொல்லி மருந்தை குடிக்க வைத்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த சிறுமிகள் மயங்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், “சிறுமிகள் இருவரையும் பாம்பு கடித்து 
விட்டதாக” டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

அப்போது, சிறுமிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறுமிகள் இருவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பதை கண்டுபிடித்தனர். 

மேலும், அவர்களைக் கொலை செய்யும் நோக்கில், அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதையும், மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

எனினும், அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அதில் ஒரு பெண் மட்டும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது குறித்தது, மருத்துவமனை சார்பில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், சம்மந்தப்பட்ட 4 பேர் மீதும் 
வழக்குப் பதிவு செய்து அவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்களைச் சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.