வேலைக்கு வந்த 3 பெண்களை, செங்கல் சூளையில் அடைத்து வைத்துப் பல மாதங்களாக அவர்களது முதலிகளே மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டாவின் மங்காப்பூர் பகுதியில் உள்ள பெனிபூர் கிராமத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த செங்கல் சூளையில் வேலைப் பார்ப்பதற்காக, பக்கத்து மாநிலமான ஜார்கண்டை மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்களை, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வேலைக்காக அழைத்து வந்து உள்ளனர். 

பின்னர், இப்படியாக அழைத்து வரப்பட்ட பெண்களை, அந்த செங்கல் சூளையின் முதலிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனையடுத்து, அந்த செங்கல் சூளையில் அந்த 3 பெண்களுக்கு அவர்கள் வேலை கொடுப்பதாக அழைத்து வந்து அங்கேயே தங்க வைத்து உள்ளனர். 

அத்துடன், அந்த 3 பெண்களின் செல்போன்களையும் அந்த முதலிகள் பறித்து வைத்துக்கொண்டு, அந்த பெண்களை அவர்களின் பெற்றோரிடம் கூட பேச விடாமல் அங்கேயே அடைத்து வைத்து துன்புறுத்தத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக, அந்த 3 பெண்களையும் அங்கேயே அடைத்து வைத்து அந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், பல மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

இதனால், அங்கு நடக்கும் கொடுமைகள் தாங்காமல், அந்த 3 பெண்களும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல பல நாட்கள் முயன்று உள்ளனர். ஆனால், அந்த முதலாளிகளின் பிடியில் அவர்கள் தொடர்ந்து சிக்கித் தவித்து உள்ளனர்.

அதே நேரத்தில், அந்த செங்கல் சூளையில் அவர்களை வேலை வாங்கி வந்துள்ளனர். இப்படியாக, அந்த சூளையில் அவர்கள் வேலை பார்த்து வந்தாலும், அந்த நேரத்தில் கூட அந்த முதலாளிகள் அந்த பெண்களை அங்கு வைத்தே தொடர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த விசயம், மெல்ல மெல்ல அந்த கிராமத்தினருக்குப் பரவிய நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள், அந்த பெண்களைப் பற்றி அங்குள்ள காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ளனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார், அந்த செங்கல் சூளைக்குள் சென்று அதிரடியாக அங்கிருந்த 3 பெண்களையும் மீட்டு அழைத்து வந்துள்ளனர்.

அதன் பிறகு, அந்த பெண்களிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, “எங்களைப் போலவே, அந்த செங்கல் சூளையில் சிறுமிகள் உட்பட பல பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு, பல நாட்களாக பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவதாக” வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இது தொடர்பாகத் தீவிரமான விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.