திருப்பதியில் கள்ளக் காதலியுடன் பைக்கில் தப்பிச் சென்ற தந்தையிடம், “டாடி.. டாடி.. எங்களை விட்டு போகாதிங்க” என்று அவரது பச்சிளம் குழந்தையும், மனைவியும் நடுரோட்டில் கதறிய சம்பவம் நெஞ்சை பதை பதைக்கச் செய்துள்ளது.

திருப்பதி சின்ன காப்பு தெருவைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்மணி, அந்த பகுதியில் அமைந்துள்ள மார்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வரும் வெங்கடாஜலபதி என்பவரை, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

வெங்கடாஜலபதி - சரஸ்வதி தம்பதிக்கு தற்போது 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், மற்றொரு பெண் உருவத்தில் புயல் வீசத் தொடங்கியது.

அதாவது, வெங்கடாஜலபதி மார்க்கெட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகத் தெரிகிறது. அவர்களது கள்ளக் காதல் கட்டுக்கடங்காமல் போகவே, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, இருவரும் கணவன் - மனைவி என்று பொய் சொல்லி வாழ்ந்து வந்துள்ளனர்.

இதன் காரணமாகப் பல நாட்கள் வெங்கடாஜலபதி தன் வீட்டிற்கும் வராமல், தன் குடும்பத்தையும் கவனிக்காமலிருந்து வந்துள்ளனர். தற்போது, வெங்கடாஜலபதியின் கள்ளக் காதலி கர்ப்பமாக உள்ளதாகத் தெரிகிறது. இதனால், வெங்கடாஜலபதி தன் வீட்டுக்கு வருவதை நிறுத்தி, கள்ளக் காதலியுடனே தங்கி உள்ளார்.

இந்த கள்ளக் காதல் விவகாரம் அவரது மனைவி சரஸ்வதிக்குத் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன், தன் கணவருடன் சேர்ந்து வைக்கக் கோரியும், கள்ளக் காதலை பிரித்து வைக்கக் கோரியும் சரஸ்வதி, அங்குள்ள காவல் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக விசாரிக்க வெங்கடாஜலபதியை, அவருடைய கள்ளக் காதலியுடன் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்திருந்தனர். அப்போது, அவரது மனைவி சரஸ்வதி தனது குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது, போலீசார் இந்த விவகாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, காவல் நிலையத்தில் கணவன் வெங்கடாஜலபதிக்கா, 2 பெண்கள் போட்டிப் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த போலீசார், இந்த புகாரை மகளிர் காவல் நிலையம் சென்று தீர்த்துக்கொள்ளச் சொல்லி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அப்போது, வெங்கடாஜலபதியின் மனைவி சரஸ்வதி கண்ணீர் விட்டு அங்க அழுதுகொண்டு இருந்தார். அவரை அவரது சக உறவினர்கள் சமாதானம் செய்துகொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த வெங்கடாஜலபதியிடம் அவரது மனைவி சரஸ்வதி கடுமையாகக் கெஞ்சி தன்னுடன் வரும் படி கூறி மன்றாடி உள்ளார். ஆனால், இதை பெரிதுபடுத்தாமல் வெங்கடாஜலபதி, தன் கள்ளக் காதலியை அவர் இருசக்கர வாகனத்தில் ஏற்றி, புறப்படத் தயார் ஆனார்.

அப்போது, வெங்கடாஜலபதியின் 8 வயது மகள், “டாடி.. டாடி.. எங்களை விட்டு போகாதிங்க. எங்களோடவே வந்திருங்கள் டாடி. ப்ளீஸ் டாடி”  என்று நடுரோட்டில் கதறிய அழுதுள்ளார். ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத வெங்கடாஜலபதி, தன் கள்ளக் காதலியுடன் செல்வதிலேயே குறியாக இருந்துள்ளார். அப்போது, மீண்டும் சரஸ்வதி மீண்டும் வந்து தன் கணவரிடம் “தன்னுடன் வாரும் படி” கெஞ்சி உள்ளார். இப்படி மனைவியும், 8 வயது மகளும் கெஞ்சிக் கொண்டிருக்கையிலேயே, வெங்கடாஜலபதி தன் கள்ளக் காதலியுடன், அங்கிருந்து வேகமாக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, கணவனின் இருசக்கர வாகனத்தைத் துரத்திச் சென்று சிறுது தூரத்தில் தன் செல்போனை அவர்கள் மேல் வீசி உள்ளார். ஆனால், அதற்குள் அவர்கள் சென்றுவிட, அந்த போன் ரோட்டிலேயே விழுந்துள்ளது.

இதனையடுத்து, அந்த காவல் நிலைய வாசலில் அழுது தவித்த சரஸ்வதியை, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், சரஸ்வதி, சாலையின் நடுவே அமர்ந்து, தன் வாழ்க்கை இப்படியாகிவிட்டே என்று நொந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது, தன் தாயை தேற்றிய அந்த 8 வயது இளம் பிஞ்சு, “அப்பா செல்போன் நம்பரை போனிலிருந்து டெலிட் பண்ணுங்க அம்மா” என்று ஆவேசமாகக் கூறினாள்.

இதனையடுத்து, கிழக்கு காவல் நிலைய போலீசார், இது தொடர்பாக அங்குள்ள திஷா பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படி அறிவுறுத்தினர். அங்குப் புகார் அளிக்க சென்ற சரஸ்வதி, டி.எஸ்.பி வந்த பிறகு வரும் படி கூறி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனால், இன்னும் விரக்தி அடைந்த அவர், சாலையில் வந்து அமர்ந்து தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.