மராட்டிய மாநிலத்தில் உள்ளபரிட்டேவாடி என்னும் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராய் பணி நியமனம் பெற்ற ரஞ்சித், “ வர்க்கி பவுண்டேஷன் UAE 147 நாடுகளின் பரிந்துரைகளில் 10 நல்லாசிரியர்களை தேர்வு செய்துள்ளது. அதில் சிறந்தவராக ரஞ்சித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்”.


மராட்டிய மண்ணில் பெரிய குடும்ப பின்புலம் இல்லாத நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ரஞ்சித். தந்தையின் விருப்பதின் பேரில் ஆசிரியரான ரஞ்சித்திற்கு பின்னாளில் இந்த பணியின் மீது அதீத காதல் ஏற்பட்டு இருக்கிறது.


இதனால் மராட்டிய மண்ணில் கல்வி பின் தங்கிய பிள்ளைகளுக்கு கல்வி தடையில்லாமல் பெற செய்வதே முக்கிய பணியாக எண்ணி பல கள செயற்பாட்டில் இறங்கினார். உள்ளபரிட்டேவாடி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்கள் வாழும் பகுதி. வறுமையும் விழிப்புணர்வும் இல்லாத ஒரு கிராமம். இங்கு ஆண் பிள்ளைகள் பள்ளிக்கு வருவதே அரிது என்றால் பெண் பிள்ளைகளை பற்றி சொல்லவே தேவையில்லை. 


கல்வி அவசியம் என்று அந்த கிராமத்து மக்களிடம் அவர்களுக்கு புரிய வைக்க , அவர்களில் ஒருவராக மாற ரஞ்சித்துக்கு தடையாக இருந்தது மொழி. மராட்டிய மண்ணில் அந்த கிராமத்து மக்களின் மொழி கன்னடம். ரஞ்சித்துக்கு கன்னடம் தெரியாது.


கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த அந்த கிராமத்து மக்களின் மொழியில் உரையாடினால் மட்டுமே சரியாக இருக்கும் என்பதை உணர்ந்த ரஞ்சித் கன்னடம் பயின்றார். கன்னடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அந்த கிராமத்து மக்களின் மனதில் இடம்பிடித்தார். பின் கல்வியின் அவசியத்தையும் , குழந்தை திருமணத்தின் ஆபத்தையும் அம்மக்களுக்கு புரியும் வண்ணம் மெதுமெதுவாக உரையாட தொடங்கினார். 


ஆசிரியர் ரஞ்சித்தின் பேச்சை உணர்ந்து பிள்ளைகள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். பெண் பிள்ளைக்கு குறைந்த வயதில் திருமணம் செய்வதும் வெகுவாக குறைந்து பெண் பிள்ளைகளும் பள்ளிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.இத்துடன் ரஞ்சித்தின் தனது பணியை முடித்துக்கொள்ளவில்லை. பள்ளிகளுக்கு வரும் பிள்ளைகளுக்கு கற்றல் குறைப்பாடு இருந்தது. ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனிகவனம் கொடுத்து அந்தக்குறைப்பாடுகளை மீறி படிப்பில் ஆர்வத்தை அதிகப்படுத்தினார் ரஞ்சித்.


இவரின் இந்த மகத்தான அர்பணிப்புகாக வர்க்கி பவுண்டேஷன் UAE 147 நாடுகளின் பரிந்துரைகளில் 10 நல்லாசிரியர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரிசுத்தொகை 1 மில்லியன் அமெரிக்க டாலர். ஆனால்  ரஞ்சித்தோ பரிசுத்தோகையில் 50 சதவிகிதத்தை மற்ற ஒன்பதுபேருக்கு பகிர்ந்தளிக்கப்போவதாக அறிவித்து இன்னும் ஒரு படி மேல் உயர்ந்து நிற்கிறார்.
நல்லாசிரியர் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள் !