ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் 56 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது, பாஜக 48 தொகுதிகளில் வென்றுள்ளது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன.  


இப்படி ஒரு தேர்தல் முடிவை சற்றும் எதர்பார்க்கவில்லை என டிஆர்எஸ் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது. காரணம் பாஜக தெலுங்கானவில் முதல்முறையாக 48 இடங்களில் வென்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 4 இடத்தில் இருந்த பாஜக, இந்த தேர்தலில்  48 தொகுதிகளில் வென்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருப்பது அதீத கவனத்தை பெறுகிறது.  


கடந்த 2016 ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில்,  மொத்தமுள்ள 150 வார்டுகளில் டி.ஆர்.எஸ் கட்சி 102 இடங்களுடன் வெற்றி பெற்றது. ஓவைசி கட்சி 42 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக கூட்டணி 4 இடங்களையும், காங்கிரஸ் ஒரே ஒரு வார்டையும் பெற்றிருந்தன.


பாரதிய ஜனதா கட்சி வேரூன்ற தெலுங்கானா மாநிலம் ஒரு சிறந்த வாய்ப்பு என பாஜக தலைமை கணக்கு போட்டு இந்தத் தேர்தலுக்கு அதிக முக்கியவதும் கொடுத்து வந்தது. அதையொட்டி ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்காக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் பட்நாவிஸ், மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, தமிழகத்தின் வானதி சீனிவாசன் என பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்காக ஹைதராபாத்லையே தங்கி பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுப்பட்டனர். 


ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சி அதிக இடங்களில் வென்றிருந்தாலும், வெறும் 4 இடங்களைக் கைப்பற்றியிருந்த பாஜக இம்முறை 48 இடங்களை பெற்றிருப்பது ஒரு எழுச்சியாக இருக்கிறது. இதனால் ஆளும் டிஆர்எஸ் கட்சி கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. இந்த தேர்தலை பாஜக வெற்றதாகவே பார்க்கிறது  டிஆர்எஸ் கட்சி தலைமை.  


தெலங்கானவை ஆட்சி செய்து வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக ஹைதராபாத் மக்களுக்கு கொடுத்த வாக்கு உறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது முக்கிய காரணமாக நிலவுக்கிறது. கடந்த தேர்தலின்போது கூட்டணி கட்சியாக இருந்த ஓவைசி கட்சியும் தெலங்கான நகர மேம்பாடுகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்பது தெலுங்கனா மக்களின் முக்கிய குற்றசாட்டு. பாஜக பெற்ற எழுச்சியில் இந்த குற்றசாட்டுகள் முக்கிய பங்காக இருக்கிறது.