நில தகராறு காரணமாக, 3 பேர் சேர்ந்து இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் சாம்லி மாவட்டத்தில் 4 குடும்பத்தினர் இடையே நில பிரச்சனை இருந்து உள்ளது. இதனால், அவர்கள் குடும்பத்திற்கு இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துகொண்டே இருந்தது. இந்த 4 குடும்பத்தில், 3 குடும்பத்தினர் ஒரு பக்கமும், ஒரே ஒரு குடும்பம் மட்டும் தனியாகவும் இந்த நிலப் பிரச்சனையில் போராடிக்கொண்ட இருந்தனர்.

இதனால், ஒரு தரப்பினர் கடும் ஆத்திரமடைந்த நிலையில், எதிர் தரப்பில் இருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யத் திட்ட மிட்டு உள்ளனர். அதன் படி, சம்மந்தப்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், எதிர் தரப்பில் உள்ள இளம் பெண் செல்லும் இடங்களை எல்லாம் பார்த்து வைத்துக்கொண்டு, அந்த இளம் பெண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது.

திட்டமிட்ட படி, எதிர்த் தரப்பில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும், அந்த இளம் பெண்ணை திட்டம் பேட்டு, கடத்தி உள்ளனர். அதன் படி, அங்குள்ள ஒரு மறைவான இடத்திற்குச் தூக்கிச் சென்று, கடுமையாகத் தாக்கி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பாலியல் வெறித் தீர்ந்து பிறகும், அந்த பெண்ணை உடனடியாக விடாமல், தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகே, அந்த இளம் பெண்ணை, மிரட்டி அனுப்பி உள்ளனர். 

குறிப்பாக, இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக வெளியே சொன்னால், கொலை செய்து விடுவோம் என்றும், அவர்கள் மிரட்டி அனுப்பியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அந்த கும்பலிடம் இருந்து விடுபட்ட அந்த இளம் பெண், அங்குள்ள ஜிங்ஹானா காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். அதன் படி, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும், இளம் பெண்ணை மறைவான இடத்துக்குத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் 3 பேரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நித்யானந்த் ராய், “பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக” குறிப்பிட்டார்.

அத்துடன், “குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரும், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என்றும், அதன் பிறகு, அவர்களைச் சிறையில் அடைக்கப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றும், அவர் தெரிவித்தார். இந்த சம்பவம், அப்பகுதியில், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.