கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் பலாத்கார செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, மூதாட்டியை பலாத்காரம் செய்த மகனுக்கு, அவனது தாயே 
உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. 

கேரள மாநிலம் கோலஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி, தீடிரென ஏற்பட்ட ரத்தப் போக்கு காரணமாக வீட்டின் அருகே மயங்கி கீழே விழுந்ததாக கூறி, கோலஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அங்கு, மூதாட்டிக்கு பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இருப்பதை மருத்துவர்கள் உறதி செய்தனர்.

மேலும், மூதாட்டியின் சிறுநீர்ப்பை மற்றும் குடலில் சில காயங்கள் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அது தொடர்பான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், இது தொடர்பாக மருத்துவமனை சார்பில், அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்த அதேப் பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஓமனா என்ற பெண்மணியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, “மூதாட்டி புகையிலை கேட்டு வீட்டிற்குள் நுழையும் போது, கால் தவறி கீழே விழுந்துவிட்டார் என்றும், அவருக்கு மனநிலை சரி இல்லை” என்றும் மழுப்பலான பதிலைக் கூறி உள்ளார்.

இதனையடுத்து, மூதாட்டியின் வீட்டில் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் பக்கத்துக்கு வீட்டுக்கு புகையிலை வாங்கச் சென்ற போது தான் இப்படி நடந்துள்ளது” என்று, கூறி உள்ளனர். இதனையடுத்து, 66 வயதான ஓமனாவை மீண்டும் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போதும், அவர் ஏற்கனவே சொன்ன அதே பதிலைக் கூறி, நழுவ பார்த்துள்ளார்.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், ஒமனாவையும், அவரது குடும்பத்தாரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களது கஸ்டடியில் தங்களுக்கே உண்டான பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. 

விசாரணையில், “கடந்த 2 ஆம் தேதி அந்த மூதாட்டி பக்கத்து வீட்டுக்கு புகையிலை வாங்க வந்ததுள்ளார். அப்போது அவருக்குப் புகையிலை மற்றும் தேநீர் கொடுத்து அந்த வீட்டில் அமர வைத்துப் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அந்த நேரம் பார்த்து, குடிபோதையில் அங்கு வந்த ஒமானவின் மகன் மனோஜ் மற்றும் அவரது நண்பன் முகமது ஷாஃபி ஆகிய இருவரும் சேர்ந்து, அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

மூதாட்டியை மகனும், அவனது நண்பனும் பாலியல் பலாத்காரம் செய்யும் போது, ஒமனா அங்கு தான் இருந்துள்ளார். அவர் முதலில் தடுத்ததாகவும், அவர் பேச்சைக் கேட்காமல் மகன் உட்பட இருவரும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதால், அதன் பறகு அந்த தவற்றுக்குத் தாயே துணை போனதாகவும்” விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், “மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, அங்கு கிடந்த கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு, அந்த மூதாட்டியின் பிறப்பு உறுப்பில் தாக்கியதும்” தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஒமானா, ஒமானவின் மகன் மனோஜ் மற்றும் அவரது நண்பன் முகமது ஷாஃபி ஆகிய பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்திற்குக் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.