இந்திய அரசியலமைப்பின் 370-வது விதியை, ஆளும் மத்திய அரசு ரத்து செய்த ஓராண்டு நிறைவுநாளில், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து அதன் முதலாவது துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்மு விலகியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்ப பெறப்பட்டது. மேலும், அம்மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டது. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த சந்திர முர்மு நாட்டின் புதிய தணிக்கையாளர் பதவிக்கு முன்னணியில் உள்ளளதாக தகவல்கள் கசிந்தது. இதனிடையே, முர்மு நேற்றைய தினம் ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு பதிலாக, புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ``ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநராக கிரீஷ் சந்திர மர்முவின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, மனோஜ் சின்ஹாவை புதிய துணை நிலை ஆளுநராக நியமனம் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்ததில் குடியரசுத்தலைவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்" என்று கருத்து கூறப்பட்டுள்ளது.

கிரிஷ் சந்திரா மர்மு 1985ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானார். இவர், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் மோடியின் முதன்மை செயலாளராகவும் இருந்தார். தொடர்ந்து, மோடி பிரதமர் ஆனதும் முர்மு உள்துறை நிதிஅமைச்சகத்தில் பணியாற்றி வந்தார். 

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்ற ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரியான ராஜீவ் மெஹ்ரிஷியின் பதவிக்காலம் கடந்த மாத இறுதியில் முடிவடைந்தது. இதையடுத்து, அந்த பதவிக்கு முர்முவை நியமிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அது தொடர்பான அறிவிக்கை ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் சின்ஹா, பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர். மேலும், மத்தியில் முந்தைய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ரயில்வே இணை அமைச்சர், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பரிவு 370-ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா மர்மு நியமனம் செய்யப்பட்டார்.

ஆளுநர் பதவி மட்டுமன்றி, மற்றுமொரு பதவியும் ஜம்மு காஷ்மீரில் காலியாக இருக்கின்றது. தற்போதைய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு 65 வயதாகி விட்டதால், அவரது பதவிக்காலம் இந்த வாரம் முடிந்துவிடும் என தெரிகிறது. கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் என்ற அந்த பதவி, அரசியலமைப்பு பதவியாகும். ஆகவே அதனை காலியாக விட முடியாது. 

அதனால், ராஜீவ் மெஹ்ரிஷிக்கு மாற்றாக ஒருவரை ஏற்பாடு செய்வதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அமைச்சரவை செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.