கணவன் - மனைவி இடையே 22 வயசு வித்தியாசம் காரணமாக, கள்ளக் காதலில் இருந்த பெண், தனது கணவனை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா உனசூர் கிராமத்தைச் சேர்ந்த 50 வெங்கடராஜூ என்பவருக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெல்லிகெரே கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான உமா என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த10 ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடந்து உள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

இப்படியாக, கணவன் - மனைவி இடையே 22 வயது வித்தியாசம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. 

இதனால், ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையே சண்டை அதிகரித்த நிலையில், உமா தனது கணவரை விட்டுப் பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதனையடுத்து, தனது பக்கத்து வீட்டு இளைஞரான 28 வயதான அவினாஷ், என்பவருடன் உமாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

மனைவியின் இந்த கள்ளக் காதல் விசயம், கணவன் வெங்கடராஜூவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, மனைவியின் வீட்டிற்கு வந்த கணவன்,  இருவரையும் அழைத்துக் கண்டித்து உள்ளார். எனினும், மனைவி உமா, காதலன் அவினாசுடன் உடனான தனது கள்ளக் காதலை விடாமல் தொடர்ந்து உள்ளார். 

இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. அப்போது, கணவன் வெங்கடராஜூவை கொலை செய்ய அவர் மனைவி உமாவும், அவரது கள்ளக் காதலனும் சேர்ந்து திட்டம் போட்டுள்ளனர். 

திட்டமிட்டபடி, கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி வெங்கடராஜூவை, உமா தனது தாயார் வீட்டுக்கு வரவழைத்து, காபியில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்திருக்கிறார். 

இதனால், காபி குடித்த அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கு தனது கள்ளக் காதலன் வரவழைத்து, கணவன் வெங்கடராஜூவின் முகத்தை தலையணையால் அமுக்கி மூச்சை திணறடித்து உமா கொலை செய்து உள்ளார். 

இதனையடுத்து, அவர் இறந்து விடவும், அவரது உடலை அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தூக்கி வீசி விட்டு, மறு நாள் தனது கணவரை காணவில்லை என உமா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

பின்னர், கிணற்றில் வெங்கடராஜூவின் உடல் கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், “தனது கணவன் வெங்கடராஜூ தற்கொலை செய்து கொண்டதாக” அவர் மனைவி உமா நாடகமாடி உள்ளார். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், உயிரிழந்த வெங்கடராஜூவுக்கு காபியில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்திருப்பதும், அவரது உடலில் கட்டையால் தாக்கிய காயங்கள் இருப்பதும் தற்போது தெரிய வந்தது. 

இதனையடுத்து, கணவனை கொலை செய்த வழக்கில், அவரது மனைவி தனது கள்ளக் காதலன் உடன் 9 மாதத்திற்குப் பிறகு போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இதனால், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி, அவர்களை சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.