மனைவி, மாமியார், மைத்துனி ஆகியோரை கொலை செய்து விட்டு, அந்த உடல்களோடு பாலியல் இச்சை மேற்கொண்ட கொடூரம் சம்பவம், நிகழ்ந்து உள்ளது கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஹரியான மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி நாட்டு மக்களையே அதிர வைத்து உள்ளது.

ஹரியான மாநிலம் சோனாபெட் மாவட்டம் பட்டிகல்யாணி பகுதியைச் சேர்ந்த 27 வயதான நூர் ஹாசன், இப்படி ஒரு கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆவர்.

27 வயதான நூர் ஹாசனுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், அங்குள்ள சமல்காவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தன் மனைவி உடன் வசித்து வந்தார். அவருக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். தன் மனைவி, 2 குழந்தைகள் என சந்தோசமாக வாழ்ந்த வந்த இவர் குடும்பத்தில் திடீரென்று புயல் வீசத் தொடங்கி உள்ளது.

நூர் ஹாசனு, தினமும் வேலைக்குச் சென்ற பிறகு அவரது மனைவி அந்த பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறி, உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், கணவன் நூர் ஹாசன் சந்தேகப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகத் தனது மனைவியிடம், நூர் ஹாசன் கேட்டுள்ளார். அப்போது, கணவன் - மனைவிக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதனால், கடும் கோபத்தில் இருந்த நூர் ஹாசன், தன் மனைவியை அவருக்குத் தெரியாமல் கண்காணிக்கத் தொடங்கியதாகத் தெரிகிறது.

மேலும், தன் மனைவியின் கள்ளக் காதலுக்கு, தன்னுடைய மாமியாரும் உடந்தை என்று, நூர் ஹாசன் சந்தேகப்பட்டு உள்ளார். இதனால், தன் மாமியார் மீதும் அவருக்கு கடும் கோபம் இருந்துள்ளது.

அதே போல, தன் மனைவியிடம் நன்றாக பேசி பழகி வந்த தன்னுடைய மச்சினிச்சிக்கும், தன் மனைவியின் கள்ளக் காதலில் பங்கு இருக்குமோ என்று சந்தேகம் நூர் ஹாசனுக்கு எழுந்துள்ளது. இதனால், மனைவி உட்பட மாமியார், மச்சினிச்சி உள்ளிட்ட அவரது ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் நூர் ஹாசனுக்கு கொலை வெறி வந்துள்ளது.

இதனால், அவர்கள் அனைவரையும் கொலை செய்ய நூர் ஹாசன் திட்டமிட்டு, தக்க சமயம் பார்த்துக்கொண்டு இருந்தார்.

அதன்படி, கடந்த 5 ஆம் தேதி வீட்டில் இருந்த தன் மனைவி மற்றும் மச்சினிச்சிக்குப் போதை மருந்து கலந்துகொடுத்து அவர்களை மயக்கமடையச் செய்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு மனைவியையும், மச்சினிச்சியையும் குத்தி கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு, கொலை செய்த மனைவி மற்றும் மச்சினிச்சி உடல்களோடு நூர் ஹாசன் மிகவும் கொடூரமான முறையில் பாலியல் இச்சை மேற்கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 8 ஆம் தேதி புர்ஷாம் கிராமத்தில் வசித்து வந்த தனது மாமியார் வீட்டிற்கு நூர் ஹாசன் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த மாமியாரைக் கழுத்தை நெரித்து நூர் ஹாசன் கொலை செய்துள்ளார். அதன் பிறகு, மாமியாரின் உடலோடும், நூர் ஹாசன் பாலியல் இச்சை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, மாமியார் உடலை எரிக்கவும் அவர் முயன்றுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் 6,7,8 ஆகிய தேதிகளில் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்டனர். இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணையில், நூர் ஹாசன் தான், இந்த 3 கொலைகளையும் செய்ததாக போலீசார் கண்டுபிடித்தனர். அதன் தொடர்ச்சியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தான், மனைவி மீதான கள்ளக் காதல் சந்தேகமும், அதனால் நிகழ்ந்த கொலைகளும், கொலைக்குப் பின்னால் நடத்தப்பட்ட பாலியல் இச்சைகளும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது.