15 வயது சிறுமியை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 61 வயது முதியவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

மண்டியா மாவட்டம் டவுன் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்த 61 வயது முதியவரான வெங்கடேஷ் என்பவர் தான், சிறுமியை கொடூரமான முறையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவர் ஆவர்.

61 வயது முதியவரான வெங்கடேஷ், அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 15 வயதுடைய ஒரு சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், அந்த 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். ஆனால், அந்த சிறுமியின் பெற்றோர் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இதனால், அவர்கள் தினமும் அதிகாலையிலேயே வேலைக்கு சென்று விட்டு மாலையில் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். இப்படிதான், தினமும் அவர்களது வாழ்க்கை சென்றுகொண்டு இருந்தது.

தனது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற பிறகு, அந்த சிறுமி பெரும்பாலும் தனது வீட்டில் தனியாகவே இருந்து வந்து உள்ளார். இதனை நோட்டமிட்ட அந்த 61 வயது முதியவரான வெங்கடேஷ், எப்படியும் அந்த 15 வயது சிறுமியை அடைந்து விட வேண்டும் என்று துடியாய் துடித்து உள்ளார்.

அதன் படி, தனது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியிடம் அத்து மீறி உள்ளே நுழைந்த அந்த 61 வயது முதியவரான வெங்கடேஷ், அந்த சிறுமிக்கு முதலில் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால், பயந்துபோன அந்த சிறுமி கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

இதனால், “இதை நீ யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அப்படி மீறி சொன்னால் நாளையே உன்னை கொலை செய்து விடுவேன்” என்றும், அவர் கொடூரமாக மிரட்டி வைத்து உள்ளார். 

ஆனாலும், வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் அந்த சிறுமி இந்த விசயத்தைத் தெரிவித்து இருக்கிறாள். ஆனால், அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு மிகவும் அசதியாக இருந்ததால், இதைப்பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால், அந்த சிறுமியும் பேசாமல் இருந்து உள்ளார்.

இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட 61 வயது முதியவரான வெங்கடேஷ், அதன் தொடர்ச்சியாக, தினமும் அந்த வீட்டிற்கு வந்து அந்த சிறுமியை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால், அந்த சிறுமி ஒரு கட்டத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளார். இதனால், அந்த சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது.

இந்த தகவலையும், சிறுமி பரிதாபமாகத் தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள மண்டியா மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 61 வயது முதியவரான வெங்கடேசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அது போல், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல் மண்டியா மாவட்டம் மத்தூரில் ஒரு சிறுமியை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அது முடியாததால், அவர்கள் அந்த சிறுமியை கொடூரமாகக் கொன்று உடலைத் துண்டு, துண்டாக வெட்டி அப்பகுதியில் ஓடும் கால்வாயில் வீசிச்சென்றதும் குறிப்பிடத்தக்கது.