“பாலியல் இன்பத்தில் நேர்மறையான, மரியாதைக்குரிய அணுகுமுறை தேவை” என்று, உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

கொரோனா என்னும் வைரஸ் பெருந் தொற்று பரவத் தொடங்கிய பிறகு, “தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?” என்ற சந்தேகமும், அச்சமும் பலரிடமும் ஏற்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தம்பதிகள் அனைவரும் பாதுகாப்பான தாம்பத்திய வாழ்க்கைக்கு சில விசயங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று, வெளிநாட்டு மருத்துவர்கள் அடுத்தடுத்து சில அறிவுறுத்தல்களை வழங்கி வந்தனர்.

அத்துடன், தம்பதிகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில் பாதுகாப்பான முறையில், தங்களது துணையுடன் இணைய வேண்டும் என்றும், வெளிநாட்டு மருத்துவர்கள் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர்.

மேலும், “தாம்பத்தியத்தில் முத்தம் மட்டுமே போதும் என்றும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கணவன் - மனைவிக்குள் மட்டும் தாம்பத்திய இன்பத்தை வைத்துக்கொள்ளலாம்” என்றும், வெளிநாட்டு மருத்துவர்கள் தொடர்ந்து புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா 2 வது அலை வீசி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களுக்கு மீண்டும் பல கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கி உள்ளன.

அதன்படி, தம்பதிகளின் பாலியல் இன்பம் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு புதிய வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

அதில், “பால்வினை தொற்று நோய்கள் உலக அளவில் உள்ள பொதுச் சுகாதாரத்திற்கான சவால்களாக உள்ளது. தனி மனிதனின் உடல் நலம், மன நலம், சமூக நிலையைப் பொறுத்தது மட்டும் இல்லாமல், சில நேரங்களில் பிறருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்து விடுவதாக” குறிப்பிட்டுள்ளது. 

“இதனால், தற்போதைய கொரோனா சூழலில் தம்பதிகள் அனைவரும் நேர்மறையான மற்றும் மரியாதைக்குரிய அணுகு முறையை தங்கள் துணையுடன் பாலியல் இன்பத்தில் ஈடுபடும் போது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், பாலியல் இன்பத்தில் கூட சுகாதாரம் மிக அவசியம்” என்றும், உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

மேலும், “வற்புறுத்தல் மற்றும் பலவந்தமான பாலியல் இன்பங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், முழுக்க முழுக்க பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பாலியல் இன்பங்கள் மட்டுமே இன்றைக் காலகட்டத்தின் மிக அவசியமான தேவையாக இருக்கிறது” என்றும், அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாலியல் ரீதியிலான விருப்பங்களைக் கொண்டிருந்தாலும், பாதுகாப்பான தாம்பத்தியத்தில் ஈடுபடுவது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கே தம்பதிகள் அனைவரும் முன்னுரிமை தர வேண்டும் என்றும், துணையுடன் பாலியல் இன்பத்தில் இணையும் போது பாலியல் ரீதியான சில தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

குறிப்பாக, “தற்போதைய சூழலில், உலகளவில் தினந்தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலியல் நோய் தொற்றுகள், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிக் கொண்டிருப்பதாகவும், தற்போது இந்த கொரோனா காலத்தில் மேலும் கவனமுடன் இருக்க வேண்டும்” என்றும், உலக சுகாதார அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளது.

பாலியல் இன்பத்தில் ஈடுபடும் போது பரவக்கூடிய குணப்படுத்தமுடியாத நோய்களைப் பொறுத்த வரை, அந்த நோயின் வீரியத்தை மட்டுமே குறைக்க முடியும் என்றும், இது போன்ற பால்வினை நோய்கள் பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக் கொள்ளும் போது தான் பரவுகின்றன” என்றும், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கியமாக, தற்போது துணையுடன் மட்டும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்த இக்காட்டான காலத்திலாவது நாம் ஒவ்வொருவரும் நம் துணைக்கு உண்மையாகவும், நேர்மையாக இருப்பது மிக அவசியம்” என்றும், உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.