17 வயது பள்ளி சிறுமி காதலித்து வந்த நிலையில், சிறுமிக்குப் பிறந்த குழந்தை தற்போது உயிரிழந்து உள்ளதால், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்து உள்ள வேங்கை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் 22 வயதான ராஜன் என்ற இளைஞருக்கும், அங்குள்ள கள்ளக்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமியும், கடந்த 2018 ஆம் ஆண்டு அங்குள்ள ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, ராஜன் தன்னுடன் கீழ் நிலையில் படித்து வந்த அந்த சிறுமியிடம் காதலை கூறியுள்ளார். அது பதின் பருவம் என்பதால், புரிதல் இல்லாத அந்த சிறுமி, ராஜனின் காதல் வலையில் வீழ்ந்து உள்ளார்.

இதன் காரணமாக, இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் மிகவும் நெருக்கமாக நெருங்கிப் பழக்கி வந்து உள்ளனர். இந்த நெருக்கமான பழக்கத்தில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதனையடுத்து, சிறுமியின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் என்ன நடந்தது என்று விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமியும் தன்னுடைய காதல் விசயத்தையும், காதலன் ராஜன் உடன் நெருக்கமாக இருந்தது பற்றியும் கூறியுள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், அதே ஆண்டில் கர்ப்பமடைந்த சிறுமிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமி தன்னுடைய குழந்தையுடன், திண்டிவனம் அவரப்பாக்கம் தாடிக்காரன் குட்டைத் தெருவில் தாய் வனிதா உடன் தங்கி வசித்து வந்தார். அந்த சிறுமியின் வாழ்க்கை இப்படியே சென்றுகொண்டு இருந்தது.

இந்நிலையில், அந்த சிறுமி தனது குழந்தை உடன் வசித்து வந்த நிலையில், நேற்யைத் தினம் அந்த சிறுமி கழிவறைக்குச் சென்ற போது, சிறுமியின் ஒன்றறை வயது குழந்தை சஷ்வந்த், திடீரென்று படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்து மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பதறிப்போன அந்த சிறுமி, தன்னுடைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து அனுமதித்தார். 

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், “குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக” கூறி உள்ளனர். அத்துடன், “குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், குழந்தை முன்னரே உயிரிழந்து விட்டான்” என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனை தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், சிறுமி பாலியல் பலாத்காரம் குறித்த போக்சோ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சிறுமிக்கு பிறந்த ஒன்றறை வயது குழந்தை திடீரென்று சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தது குறித்து, வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.