தமிழ் திரையுலகில் மக்கள் விரும்பும் நகைச்சுவை கலைஞனாக திகழ்பவர் சூரி. பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரியின் எதார்த்தமான காமெடி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது. விஜய், அஜித், விஜய்சேதுபதி, விஷால் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது லாக்டவுன் என்பதால் தனது குடும்பதினருடன் நேரத்தை செலவு செய்து வருகிறார் சூரி. 

குழந்தைகளை குளிக்க வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது. அவ்வப்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது என தனது வீடியோக்களை வெளியிட்டு வந்தார் சூரி. மேலும் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருவார். இந்த லாக்டவுனில் சூரி செய்த சிறப்பான காரியம் என்னவென்றால், மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியது. லாக்டவுனில் வீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவுப்படுத்தும் வகையில் சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக தனது கருப்பன் காளையுடன் கம்மாய்க்கரைக்கு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தினார். இந்நிலையில் சூரி ஜிம்மில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ஆரம்பகால படங்களில் ஒல்லியாக இருந்த சூரி, தீவிர உடற்பயிற்சியின் மூலம் கட்டுடலை பெற்றார். சீமராஜா படத்தில் 6 பேக்ஸுடன் தோன்றிய சூரியை யாராலும் மறக்க முடியாது.  

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோபேக் புகைப்படங்களை பகிர்ந்துள்ள சூரி, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி என இருவரும் திரையில் போட்டியாளர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும் நடிகர் சூரிக்கு மனதளவில் இருவரும் நெருக்கமானவர்களே என்ற அடிப்படையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் ஒரு காட்சியின் புகைப்படத்தையும், விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் திரைப்படத்தில் நடித்தபோது ஜீப்பில் நின்று கொண்டு எடுத்தவாறு புகைப்படம் ஒன்றையும் இந்த பதிவில் பதிவிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி. பாண்டிராஜ் இயக்கிய இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#throwback shooting days ❤❤

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on