கொரோனா தொற்று பற்றி வெளியாகும் தவறான கருத்துக்கு, உலக சுகாதார அமைப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் வழிப்புடன் இருக்கும் வகையில், பல்வேறு வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

WHO insists more attention to defeat Corona

அதே நேரத்தில், கொரோனா தொற்று பற்றிய தவறான தகவல்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனால், கொரோனா தொற்றின் தவறான கருத்துக்கு உலக சுகாதார அமைப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. 

தவறான கருத்து:
ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் குடித்தால், கொரோனா வைரஸ் பரவாது. 

சரியான பதில்:
இது உண்மை என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.


தவறான கருத்து:
கொரோனா வெப்பம் மற்றும் ஈரப்பதமான காலநிலையில் வாழும்.

சரியான பதில்:
வெப்பம் - ஈரப்பதமான காலநிலை, குளிர் மற்றும் வறண்ட நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளது.

WHO insists more attention to defeat Corona
தவறான கருத்து:
குடிநீரானது தொண்டைப் புண்ணை நீக்கி கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும். 

சரியான பதில்:
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குக் குடிநீர் அவசியம். ஆனால், குடிநீர் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தாது. 

தவறான கருத்து:
மது அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்காது.

சரியான பதில்:
மது அருந்துவது கொரோனா தொற்றிலிருந்து யாரையும் பாதுகாக்காது.

இப்படியாக வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரப்பப்பட்டு வந்த கொரோனா பற்றிய தவறான செய்திகளுக்கு, உலக சுகாதார அமைப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது.