சேலத்தில் கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த தாயின் முகத்தில் தலையணையை அமுக்கி, மகனே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“காதலுக்கு கண் இல்லை என்பது பழைய மொழி. கள்ளக் காதல், கண்ணை மறைக்கும் என்பதோ புது மொழி!” 

காதல் உன்னதமான ஒரு உணர்வு தான். ஆனால், கள்ளக் காதல் தொற்று நோயாக அல்லாவா, இந்த சமூகத்தில் பரவி வருகிறது.

காதல் உயிரை கொடுக்கும். ஆனால், கள்ளக் காதல் உயிரை அல்லவா எடுக்கிறது?!

Son kills mother in salem extramarital affair

கள்ளக் காதல் காதைகளில் எப்போதும் கணவன், மனைவியைக் கொல்வதும், மனைவி கணவனைக் கொல்வதும் அல்லது இருவரும் சேர்ந்து தங்கள் குழந்தைகளையே கொன்றதாக கேள்விபட்ட கதைகளுக்கு மத்தியில், இங்கே கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்ததாகப் பெற்ற தாயையே, மகன் கொடூரமாகக் கொலை செய்துள்ள காமத்தின் கம்பீரமா? காமூகத்தின் வீதியமா? 

சேலம் மாரியப்பன் நகரில் சிவக்குமார் என்பவர், தனது தயார் நல்லம்மாள் உடன் வசித்து வந்துள்ளார்.

சிவக்குமாருக்கு திருமணம் ஆகாத நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரின் மனைவி ஜெயலட்சுமி உடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

Son kills mother in salem extramarital affair

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நல்லம்மாள், மகனை கண்டித்துள்ளார். ஆனால், தயாரின் அறிவுரையைப் பொருட்படுத்தாத சிவக்குமார், ஜெயலட்சுமி உடன் தொடர்ந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இதனால், நல்லம்மாள் மகனை கடுமையாக எச்சரித்து, அறிவுரையும் கூறியுள்ளார்.

இதனால், எரிச்சல் அடைந்த சிவக்குமார், தனது கள்ளக் காதலியுடன் சேர்ந்த பெற்ற தாயைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

அதன்படி, நல்லம்மாள் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்துக் குடிக்க வைத்துள்ளனர். இதனையடுத்து, நல்லம்மாள் தூங்க சென்றதும், அடங்காத காம வெறியால், கள்ளக் காதலி ஜெயலட்சுமியின் துண்டுதலின் பேரில், பெற்ற தாய் என்று கூட பார்க்காமல், தாயின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார்.

மகனின் கொலை முயற்சியில் துடிதுடித்த தாய், எந்த பாவமும் அறியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். 

தாய் இறந்த பிறகு, அந்த குற்ற உணர்வு சிவக்குமாரை கேள்வி கேட்டுள்ளது. இதனால், கடும் மன உலைச்சலுக்கு ஆளான சிவக்குமார், நேரமாக அந்த பகுதியில் உள்ள அம்மா பேட்டை காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

இது வழக்குப் பதிவு செய்த போலீசார், நல்லமாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிவக்குமார் மற்றும் கள்ளக் காதலி ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காமம் தலைக்கேறிய நிலையில், கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தாயை, மகனே கொலை செய்த சம்பவம், சேலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.