18 வயது கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை கழிவறை வாளியில் மாணவி, மறைத்து வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியின் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்த 18 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்துள்ளார்.

maharashtra college girl pregnant baby in bathroom

இந்நிலையில், காதலின் எல்லை மீறிய காதலர்கள், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதனால், அந்த மாணவி கரு உற்றுள்ளார். ஆனால், தான் கரு உற்று இருப்பது சுமார் 4 மாதங்களுக்குப் பிறகே மாணவிக்குத் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, இதனை வெளியே சொன்னால், தனக்குப் பிரச்சனை என்று கருதிய அவர், இதை யாரிடமும் சொல்லாமல் தினமும் கல்லூரி சென்று வந்துள்ளார்.

maharashtra college girl pregnant baby in bathroom

ஒரு கட்டத்தில் மாணவிக்கு, கல்லூரியின் விடுதியிலேயே குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மாணவி, அங்குள்ள கழிவறை வாளியில் பிறந்த குழந்தையை மறைத்து அங்கேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். 

பின்னர், குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, விடுதியின் வாடன் உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தை இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

maharashtra college girl pregnant baby in bathroom

பின்னர், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், விடுதியில் உள்ள அனைத்து மாணவிகளையும் வரவைத்து விசாரணை நடத்தி உள்ளனர். 

அப்போது, 18 வயதான ஒரு மாணவிக்குப் பிறந்த குழந்தை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, குழந்தையையும், அந்த மாணவியையும், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், மாணவிக்குக் குழந்தை பிறந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியின் காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலம் 18 வயது கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.