திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில், இன்று முதல்நாளே காய்கறிகளின் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. 

சென்னையை அடுத்த திருமழிசையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில், இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது.

நாளை முதல் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்!

கொரோனா தொற்று பகுதியாக மாறிய சென்னை கோயம்பேடு சந்தை, முழுவதுமாக மூடப்பட்ட நிலையில், உடனடியாக சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிகமாகக் காய்கறி சந்தையை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக முழுவீச்சில் நடைபெற்று வந்தது. அந்த ஒரு வார காலமும், சென்னையில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

அத்துடன், காய்கறியின் விலைகளும் சென்னையில் கிடுகிடுவென உயர்ந்தது. இதனிடையே, திருமழிசை தற்காலிக காய்கறி மார்கெட்டில் இன்று முதல் விற்பனை தொடங்கியது.

இதனால், இன்று அதிகாலை முதலே பல்வேறு சிறு வியாபாரிகள் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே, புதிய சந்தையின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, இன்று புதிய காய்கறி சந்தை திறந்ததால், காய்கறிகள் விலையும் குறைவாகவே காணப்படுவதா, வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Chennai Vegetables New Price List

மேலும், புதிய சந்தையில், சமூக இடை வெளியைப் பின்பற்றி பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்லுமாறு ஒலிபெருக்கியின் மூலம், போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். 

இன்று மட்டும் சுமார் 5000 ஆயிரம் டன் காய்கறிகள், புதிய சந்தைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.14, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.25, பீட்ரூட் ரூ.30, பாகற்காய்-25, கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ.25, முள்ளங்கி 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.