சிறுமியை மிரட்டி நினைக்கும்போதெல்லாம் பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு அருகே கஸ்பா பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று, நீண்ட வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பசுபதி என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

Erode Man arrested for girl raped

இந்நிலையில், காப்பகத்தில் உள்ள ஒரு சிறுமியை, ஆசை வார்த்தைகள் கூறி தனது இச்சைக்குப் பசுபதி அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுக்கவே, அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி பயந்துபோனதால், அந்த பயத்தை வைத்தே, தான் நினைக்கும்போதெல்லாம், சிறுமியைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Erode Man arrested for girl raped

ஒரு கட்டத்தில், அந்த ஓட்டுநரின் பாலியல் தொல்லையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வலியால் துடித்த சிறுமி, காப்பக நிர்வாகியிடம் அழுதுகொண்டே புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பசுபதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பசுபதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.