பிறந்தநாளன்று பலாத்காரம் செய்யப்பட்டு இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியைச் சேர்ந்த 19  வயது இளம்பெண், கடந்த கடந்த 27 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, தன் சக தோழிகளைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

Telangana 19 years old girl raped and murder

இதனையடுத்து, அந்த இளம் பெண், தனது ஆண் நண்பர் தீனதயாள் நகரைச் சேர்ந்த, புலி சாய் கௌடாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்ற அவன், அந்த பெண்ணை தவறான உறவுக்கு அழைத்ததாகத் தெரிகிறது. அதற்கு அந்த பெண் மறுப்புத் தெரிவிக்கவே, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, அடித்துத் துன்புறுத்திவிட்டு, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணை கொன்றுவிட்டு, இரவு 9 மணியளவில் ஹனம்கொண்டா பகுதியில் யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

இதனிடையே, தனது பெண் வீடு திரும்பவில்லை என்று இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இரவு 10 மணி அளவில், ஹனம்கொண்டா பகுதியிலிருந்து, அந்த பெண் சடலமாக மீட்கப்பட்டார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பெண்ணின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து, விசாரித்தனர். அப்போது, புலி சாய் கௌடாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Telangana 19 years old girl raped and murder

விசாரணையில், அந்த பெண்ணை தவறான உறவுக்கு அழைத்ததாகவும், அவர் வர மறுத்ததால் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர்கள், அந்த காமகொடூரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, புலி சாய் கௌடாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.