உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65.75 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3.88 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் சூறாவளியைப்போல் சுழன்று சுற்றி அடிக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இதனால், கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது.

 COVID cases cross 65 lakhs and nearing 4 lakh deaths

உலகிலேயே கொரோனாவுக்கு அதிகபட்சமாக உலக வல்லரசான அமெரிக்காவில் தான் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவில் புதிதாக 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 19 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மிகச் சரியாக, அமெரிக்காவில் 1,901,783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,09,142 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரம் பேருக்கு புதிதான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,84,562 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்க கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,568 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், ரஷ்யாவில் இதுவரை 432,277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,215 ஆக உயர்ந்துள்ளது.

 COVID cases cross 65 lakhs and nearing 4 lakh deaths

ஸ்பெயினில் 287,406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,128 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் 279,856 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 39,728 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், உலக அளவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது.

ஒட்டுமொத்தமாக, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,575,177 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 388,060 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் உலகம் முழுவதும் கொரேனாவாலிருந்து பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,171,783 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, சீனாவின் ஊஹான் நகரில் 99 லட்சம் பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.