கோவையில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 61 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் ஐயப்பன் நகரைச் சேர்ந்த 15 வயது மாணவி, அங்குள்ள தனியார் பெண்கள் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

Covai 9th student sexual abuse

சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றபோது, வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருதுள்ளார். அப்போது, அதே பகுதியில் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வரும் 61 வயதான சேக் பாவா, வீட்டில் தனியாக உள்ள சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து, நன்றாக அறிமுகமாகி உள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியும் உயிர் பயத்தில், அவர் சொன்னபடியெல்லாம் கேட்டு நடந்துள்ளார். ஒருமுறை ருசி கண்ட அந்த கள்நெஞ்க்காரர், ஆசை வரும்போதெல்லாம் சிறுமியைக் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டி உள்ளார்.

ஒரு கட்டத்தில், பாலியல் பலாத்காரத்தின்போது,  சிறுமிக்கு அளவுக்கு அதிகமாக முதியவர் டார்ச்சர் கொடுத்துள்ளார். அந்த வேதனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத சிறுமி, என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று முடிவுக்கு வந்து, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார்.

Covai 9th student sexual abuse

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷேக்பாவாவை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, மேட்டுப்பாளையத்தில் சிறுமியை மிரட்டியே கடந்த 9 மாதங்களாக முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.