தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக, ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Corona count increases to 9 in TN 40 affected

குறிப்பாக, மதுரையில் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரின் மனைவிக்கும், அவர் பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரோடு ஏற்கனவே தொடர்பிலிருந்த இருவருக்கும், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்பிலிருந்த ஒருவருக்கும், சென்னையைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் என மொத்தம் 9 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 38 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Corona count increases to 9 in TN 40 affected

அத்துடன், கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் கொரோனா பீதியில் உரைந்துபோய் உள்ளனர்.  

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு கொரோனா வார்டில் இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் கொரோனா பாதிப்பாமல் தான் உயிரிழந்தார்களா என்பதை இதுவரை உறதி செய்யப்படவில்லை.

கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மொத்தமாக 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சேலத்தில் 6 பேரும், ஈரோட்டில் 5 பேரும், மதுரையில் 3 பேரும், கோவை, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூரில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே,  அயர்லாந்திலிருந்து தமிழகம் திரும்பிய 21 வயது இளைஞர் ஒருவர், கொரோனா தொற்றுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் முழுமையாக குண்மடைந்துவிட்டதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை, கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகளை தெற்கு ரயில்வே தற்போது தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.