கொரோனா வைரசால் 88 நாடுகளுக்குப் பரவி உள்ள நிலையில், உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவில் உருவாகி, இன்று அண்டார்க்டிகாவைத் தவிர 6 கண்டங்களைச் சேர்ந்த ஒட்டு மொத்த உலக நாடுகளுக்கும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ்.

Corona Virus deaths rise to 3400 in 88 countries

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 88 நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ல் இருந்து 3 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், கொரோனா வைரஸ்க்கு சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 651 லிருந்து, 80 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது.

Corona Virus deaths rise to 3400 in 88 countries

குறிப்பாக, உலகம் முழுவதும் சுமார் 98 ஆயிரத்து 192 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சீனாவில் மட்டும் 80 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 

அதேபோல், கொரோனா வைரசால் சீனாவில் மட்டும் 3 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்த நிலையில், மற்ற உலக நாடுகளில் 355 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,400 ஆக அதிகரித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.