16 வயது இளம் பெண்ணிடம் முத்தம் கேட்டு போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம் பெண், தனது தந்தையுடன் சேர்ந்து நுங்கம்பாக்கத்தில் சமோசா விற்பனை செய்து வருகிறார்.

Chennai Man who harassed minor girl arrested under POSCO

இந்நிலையில், நேற்று வழக்கம்போல், நுங்கம்பாக்கத்தில் சமோசா விற்பனை செய்து முடித்துவிட்டு, இரவு தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான பஷீர், போதையில் வந்து, இளம் பெண்ணை வழி மறித்துள்ளார்.

பின்னர், அந்த இளம் பெண்ணிடம் முத்தம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். அந்த பெண் முத்தம் கொடுக்க மறுக்கவே, அந்த பெண்ணின் கண்ணத்தில் அறைந்துள்ளார்.

இதனால், அழுதுகொண்டே வீடு திரும்பிய சிறுமி, வீட்டில் வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், போலீசாரிடம் நடந்ததைக் கூறி உள்ளார்.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார்,  போதை ஆசாமி பஷீரை, போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.