சென்னையில் போலீஸ் ஏட்டை அவரது மனைவி நடுரோட்டில் அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து போலீசில் காவலாக பணியாற்றும் வெஸ்லிராஜ், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

Chennai police constable beaten by wife on the main road Tamil Nadu

இந்நிலையில், மயிலாப்பூர்க்கு உட்பட்ட சாந்தம் பகுதியில் வெஸ்லிராஜ், போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது மனைவி, அவருடன் நடுரோட்டிலியே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், என்ன செய்து என்று தெரியாமல் தவித்த வெஸ்லிராஜ், மனைவி தன்னை திட்டுவதைத் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

Chennai police constable beaten by wife on the main road Tamil Nadu

இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி, வெஸ்லிராஜை நடுரோட்டிலேயே அடித்து உதைத்து, அவரது சட்டையைக் கிழித்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து, இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர்.

பின்னர், இது தொடர்பாக வெஸ்லிராஜ், தான் பணியாற்றும் அதே காவல் நிலையத்தில், தன் மனைவி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.